பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இலக்கியக் காட்சிகள்


ஆடினின் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே”

(புறநானூறு , 109. 14-18.)

என்று பாடியுள்ளது கண்டு இக் கூற்றின் உண்மையினை அறியலாம். மேலும், பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடு கட்ாம் கூததராற்றுப்படை’ என்றும் வழங்கப்படுகிறது.

மேலும், குறிஞ்சிக்கலியின் பாடல்கள் பல நாடக நயம் நிறைந்து காணப்படுகின்றன.

கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்’ என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியின் முதற்பாடலும்,

‘காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்’

என்று தொடங்கும் மூன்றாம் பாடலும்,

“சுடர்த்தொடீ கேளாய் தெருவில்காம் ஆடும் மணற்சிற்றில் காலிற் சிதையா’

என்று தொடங்கும் பதினைந்தாம் பாடலும்,

“திருந்திழாய் கேளாய்கம் ஊர்க்கெல்லாஞ் சாலும்’

என்று தொடங்கும் இருபத்தொன்பதாம் பாடலும்,

நாடக நயம் நிறைந்தொளிரும் குறிப்பிடத் தகுந்த பாடல் களாகும்.

சிலப்பதிகார காலத்தில்

இலப்பதிகாரம் தமிழின் முதற்பெரும்-தனிப்பெரும் காப்பியமாகும். இது ‘முத்தமிக் காப்பியம்’ என்றும் வழங் கப்பெறும், சிலப்பதிகாரத்தின் கலைச்செல்வி, நாடக மடந்தை’ என்று குறிப்பிடப்படுகிறாள்.