உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 69

இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப் பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகரணவாகிச் சுவைபட வருவன வெல்லாம் ஒருங்குவந்தனவாகக் கூறுதல்’’

என்று குறிப்பிட்டுள்ளமை நாடக வழக்கின் நயத்தினை நன்கு காட்டும் ,

ஆயினும், இக்காலத்தே நாடகங்கள் மிகப் பலவாக வழங்காமல் அருகியே போயிருக்க வேண்டும். காரணம், இக்காலத்தொழுந்த நாடக நூல்கள் ஒன்றேனும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் படிப்பதற் கென்று நாடகங்கள் எழுதப் பெறவில்லை என்பது தெரியவருகிறது. நடிப்பதற்கென்றே நாடகங்கள் எழுதப்பெற்று, அவையும் நாடகக் குழுவினர் மட்டுமே எழுதிப் படித்துக் கொள்ளும் நிலையில் இருந்தன

என்பதனை உணரலாம்.

பிற்காலச் சோழர் காலத்தில்

இடைக்காலத்தே நலிந்துபோன நாடகக் கலைக்குப் பிற்காலச் சோழ மன்னர்கள் புத்துயிரூட்டிப் புரந்தனர். திருக்கோயில்களில் திருவிழாக் காலங்களில் நாடகங்கள் நடிக்கப்பெற்றனவாக நாம் அறிய வருகிறோம். முதலாம் இராஜராஜ சோழ மன்னன் காலத்தே தஞ்சைப் பெரு வுடையார் திருக்கோயிலில் இராஜராஜேசுர நாடகத்தை ஆட ஏற்பாடு செய்தான் என்று கல்வெட்டொன்று குறிப் பிடுகின்றது. அக் கல்வெட்டுப் பகுதி வருமாறு:

.........உடையார் பூரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலிலே ராஜராஜேசுவர நாடக