உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இலக்கியக் காட்சிகள்


ஈண்டு வேண்டப்படுவதில்லை. ஆயினும் இந்நூல்களில் சமண சமயக் கோட்பாடுகளின் எதிரொலி காணப்படு கின்றது என்பது மட்டும் உண்மையாகும்.

இனி, சைனப் பெருமக்கள் தமிழ்மொழிக்கு ஆற்றி யுள்ள தொண்டினைச் சற்று மேலோட்டமாகக் காண்போம்.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவரால் இயற்றப் பட்டது. இச் சீரிய காப்பியம் நாமகள் இலம்பகம் முதலாக முத்தியிலம்பகம் ஈறாகப் பதின் மூன்று பிரிவுகளையும் 3145 பாக்களையும் மகாண்டு உள்ளது. சமணர்கள் இந்நூலி னைப் பாராயணப் பனுவல் நூலாகக் கொள்வர். சீவகன் மகளிர் எண்மரை மணக்கும் செய்தி இந்நூலிற் கூறப்படு வதனால், இந் நூலினை மண நூல் என்றும் வழங்குவர்.

சான்றோர் தன்மைகளாக நாலடியார்,

கள்ளார் கள்ளுண்ணார் கடிவகடிங் தொரீஇ எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையார்-தள்ளியும் வாயிற் பொய்கூறார் வடுவறு காட்சியார் சாயிற் பரிவ திலர்

(நாலடியார்; 157).

என்று கூறும். இதுபோன்றே திருத்தக்கதேவர் தம் சமண சமயக் கோட்பாட்டினையும் பற்றினையும் பின் வரும்

இரு பாடல்களிற் சுட்டுவர்:

குழற்சிகைக் கோதை சூட்டிக்

கொண்டவ னிருப்பமற்றோர்

நிழற்றிகழ் வேலினானை

கேடிய நெடுங்கணாளும்