உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இலக்கியக் காட்சிகள்


தோணோக்கம், திருப்பொன்னுரசல் முதலிய பாடல்கள் இசையோடு சார்த்திப் பாடப்பெற்றுவரும் பாடல் களாகும். மேலும்,

+ i = H = + உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச்

(சூழல்புக்கோ

(திருக்கோவையார்; 20; 2-3)

என்ற திருக்கோவையார்ப் பாடற்பகுதி, இறைவன் ஏழிசைச் சூழலின் வயப்பட்டான் என்பதனைக் காட்டா நிற்கும்.

பிற்காலச் சோழர்கள் காலத்தில், திருப்பதிகங்கள். பண்முறையோடு பரம்பரையாக ஒதுவாமூர்த்திகளால் பயிலப்பெற்றுப் பாடப்பெற்று வந்தன என்ற செய்தி யினைக் க ல் .ெ வ ட் டு க் க ள் கொண்டு அறியலாம். ‘முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்,’ என்று அருணகிரிநாதர், முருகப்பெருமான் முத்தமிழ்பாற்

கொண்ட காதலைக் குறிப்பிடுவர்.

சீகாழி அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனை, திரிகூட ராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி, என்னயினாப் பிள்ளையின் முக்கூடற்பள்ளு. (ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்ற கருத்தும் உண்டு) மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சர்வசமயக் கீர்த்தனை கள், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டி யாரின் காவடிச் சிந்து, இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா முதலியன, இசைத்தமிழ் உலகிற்குக் கிடைத்த கொடைப் பனுவல்களாகும்.

தமிழ்நாட்டில் தெலுங்குப் பாடல்கள் நுழைந்து கொண்டு, தமிழர்க்கெனத் தமிழ் இசைப்பாடல்களே