உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தாதியில் சுந்தரர்

21


பாலித்தார், கூனன் கூன் நிமிரப் பெற்றான்; குருடன் கண் பெற்றான். இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி (48) பின்வருமாறு கூறும் :-

கூற்றுக் கெவனோ புகல்? திருவாரூரன் பொன்முடிமேல் 
ஏற்றுத் தொடையலும் இன்அடைக் காயும் இடுதரும்அக் 
கோல்தொத்து கூனனும் கூன்போய்க் குருடனும் கண்பெற் 
சாற்றித் திரியும் பழமொழி யாம்இத் தரணியிலே.    [றமை

இச்செய்தி திருத்தொண்டர் புராணம்-கூற்றுவ நாயனார் புராணத்து இறுதிச் செய்யுளில் சேக்கிழார் சுவாமிகளாலும் அருளப் பெற்றுள்ளது. அது வருமாறு:-

           தேனும் குழலும் பிழைத்ததிரு
                னொழியாள் புலவி தீர்க்கமதி
           தானும் பணியும் பகைதீர்க்குஞ்
                சடையார் துாது தருந்திருநாள் 
           கூனும் குருடுந் தீர்த்தேவல்
                கொள்வார் குலவு மலர்ப்பாதம் 
           யானும் பரவித் தீர்க்கின்றேன்
                ஏழு பிறப்பின் முடங்குகூன்.