உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

 இலக்கியக்கேணி


திருமடம் என்று ஒரு மடத்தைக் குறித்துச் சில செய்திகளைக் கூறுகின்றது. இக்கல்லெழுத்து 'வாழ்க அந்தணர்' என்ற திருப்பாடலை முதற்கண் கொண்டுள்ளது. சிதம்பரத்தவராகிய சுப்பிரமணிய சிவம் என்பார் 'கண்டாபரணர்' என்றவருடைய பெயரர். இவர் சில நிலங்களை விலைக்கு வாங்கித் திருத்தொண்டத் தொகையான் திருமடத்துக்கு அளித்தார். இத்திருமடம் கோவந்தபுத்துாரில் திருவிசயமங்கை என்ற திருக்கோயிலில் திருமடை விளாகத்தில் இருந்தது. இங்ஙனம் அளிக்கப்பெற்ற நிலவருமானம் இத்திருமடத்துக்கு வரும் யாத்திரிகர்களுக்கு உப்பும் ஆமணக்கெண்ணெயும் கொடுக்கவும், ஸ்தானத்தார் நோய்வாய்ப்படின் அவர்களுக்கு வைத்திய உதவி செய்யவும் பயன்படுத்தப் பெற்றது. மேற்குறித்த சுப்பிரமணிய சிவம் என்பவரே இம்மடத்துக்குத் தலைவர் போலும். தன்னால் நியமிக்கப் பெறும் பின் உரிமையுள்ளவர்கள் தனக்குப் பிறகு இத்தருமங்களைச் செய்து வருதல் வேண்டும் என்றும், தனக்குப்பின் உரிமையுள்ளவர்களை நியமிக்கத் தவறினால் இம் மடத்துக்குத் தலைவர் ஒருவரைச் சிதம்பரத்தில் உள்ள திருத்தொண்டத் தொகையான் மடத்துத் தலைவரே நியமிக்கலாம் என்றும், அங்ங்னம் நியமிக்கப் பெறுபவர் மேற்குறித்த தருமங்களைச் செவ்வனே புரிதல் வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப் பெற்றது. எனவே சிதம்பரத்திலும் கோவந்தபுத்துாரிலும் திருத் தொண்டத்தொகையான் திருமடம் என்று திருமடங்கள் இருந்தன என்று அறிகிருேம்.

குலசேகர பாண்டியனது 13 ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டிலிருந்து திருத்தொண்டத் தொகையான்