உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்

43


   சாதியின் பிரிவாகி, வெவ்வேறு சமயங்கள்
      தானாகி, நானாகி, மெய்ச் 
    சாலோக சாமீப சாரூப சாயுச்ய
       தன்னொளியி லீலை யாகி,
  ஓதிய(து) அனைத்தினும் அடங்காமல் வேருகி,
      உள்ளும் புறம்பும் ஆகி, 
  ஒளியிலொளி யாகி,மற் றிரவுபக லற்றவிட
      மொப்புவித் தெனேயி ருத்தித்
   தீதினை யகற்றிநின் றிருவருள் புரிந்தவா
       சிறுதே ருருட்டி யருளே
   சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
       சிறுதே ருருட்டி யருளே.

முருகனே திருஞான சம்பந்தராகத் திருவவதாரஞ் செய்தார் என்பது இவ்வாசிரியர் கருத்து. 'ஒரு வேடுவன் பறவைக்கு நிறை புகுந்த பார்த்திவன் பாவையும் இயற் குலச்சிறையும் பணிந்தருள மதுரைபுக்கு...சைவ நெறி ஈடேற வருகவுணியக் குழவி' (செய்யுள் 33); கலை தெரி புகலி வளமுற மருவு கவுணிய வருக (செய்யுள் 61); 'கன்றும் அமண்கழுவேறக் காழிப்பதியில் வந்துதித்துக் கள்ளப் பரசமயக் குறும்பர் கலக மொழித்துக் கட்டழித்தாய்' (செய்யுள் 90) என்பனவற்றுள் காண்க.

வறலாறுகள்

சிபியின் வரலாறு, 'ஒரு வேடுவன் பறவைக்கு நிறை புகுந்த பார்த்திவன்' என்று செய்யுள் 33 இல் குறிக்கப் பெற்றது.

திருஞானசம்பந்தர் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஆகிய இருவர் வேண்டுகோளின்படி மது