உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ்

45


இறையனார் களவியல் யாத்தமையும், பரணர் முதலிய பல புலவர் அந்நூலுக்குரை கண்டமையும், முருகப் பெருமான் சிறந்த பொருள் விரித்தமையும் 46ஆம் பாடலில் விவரிக்கப் பெற்றுள்ளது. முருகப்பெருமான் களவியற்குரை வகுத்தமை குறித்துப் பின்வரும் இறையனர் களவியலுரைப் பாயிரப் பகுதிகளால் தெரியலாம்:- -

'இவ்வூர் உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மன் என்பான்...... ஐயாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளையுளன்; அவனைக் கொண்டுபோங்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரப்பொருளுரைத்தால், கண்ணிர் வார்ந்து மெய்ம்மயிர் சிலிக்கும் மெய்யாயின உரைகேட்டவிடத்து: மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளாவிருக்கும்; அவன் குமார தெய்வம்; அங்கோர் சாபத்தினால் தோன்றினான்.......... 'உப்பூரிகுடிகிழார் மகனாவான் உருத்திர சன்மன் செய்தது இந்நூற்குரை என்பாருமுளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டார் என்க'

தக்கன் வேள்வி தகர்த்தது 66 ஆம் செய்யுளில் விரிவாயுள்ளது, சூரியன் பல்லை உகுத்தது, வெள்ளி விழியைக் கெடுத்தது, இந்திரன் பறந்து சென்றது, நான்முகன் சென்னியைத் திருகியது. தக்கன் சிரத்தையறுத்தது, அழற்கடவுள் கைத்தல மறுத்தது-ஆகியவை இப்பாடலுள் கூறப்பெற்றுள்ளன.

அடிமுடி தேடிய வரலாறு 71 ஆம் செய்யுளிலும், பாரதப் போர் 74ஆம் செய்யுளிலும் கூறப்பெற்றுள்ளன.