உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

இலக்கியக்கேணி

தகாது" என்று கூறினார். உடனே திருஞான சம்பந்தர், " நாம் சிவபெருமானின் திருவடிகளைத் துதிக்கிறோம்; ஆதலான் அடியார்களாகிய நம்மைக் கோள்களும் நாளும் துன்புறுத்த மாட்டா இதற்கு ஆணை நமதே " என்ற பொருள் பொதிந்த ஒரு பதிகம் பாடினார். இது கோளறு பதிகம் எனப்பெறும். இப் பதிகத்தின் பதினோராவது பாடல் பின்வருமாறு :-

தேனமர் பொழில்கொளாலே விளைசெந்நெல்
துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொன் மாலைஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணே நமதே.

சீர்காழியில்

திருஞானசம்பந்தர் சீர்காழியில் வீற்றிருந்த பொழுதெல்லாம் பல திருப்பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று 'மடல்மலி கொன்றை' என்பது; இதன் இறுதிப் பாடலில் 'ஆணையும் நமதே' என்று கூறப்பெற்றுள்ளது. அப்பாடல் வருமாறு:-

கானலங் கழனி ஒதம்வந் துலவுங்
கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்தன் நற்றமிழ் மாலை
நன்மையால் உரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி
உள்ளமும் ஒருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்
மற்றிதற்(கு) ஆணையும் நமதே.