பக்கம்:இலக்கியக் கேணி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

இலக்கியக்கேணி


பெறுகிறது. ' வசையில் வள்ளுவன் வாய்மொழிப் பொருளை இசைபட நுவல்வோர் இறந்த பின்னர்' இவர் இவ்வுரை செய்தார் என்று " மாயிருஞாலத்து” என்ற உரைச் சிறப்புப் பாயிரம் (பெருந்தொகை-1539) நூவலாகிற்கும். இவரெழுதியதாகத் திருமுருகாற்றுப் படை யுரையொன்றும் வெளிவந்துள்ளது.

இவருரை : பரிமேலழகருரை எழுதப்பட்ட பிறகு, பரிமேலழகருரையே சிறப்புடையதெனக் கருதப்பெற்ற வாறு போலப் பரிப்பெருமாள் காலத்தில் பரிப்பெருமாள் உரை சிறந்து விளங்கியதாதல் வேண்டும். இவருரை ' தலையாய பரிமேலழகர் உரைப் பின்சார நன்று ' என்று பாராட்டப் பெறுவது; திருக்குறளின் உட் பொருளை நன்கு விளக்குவது: மணக்குடவருரையைத் திருத்தியமைத்த புத்தம் புத்துரையாக விளங்குவது: மணக்குடவர் கொண்ட பாடங்களின் வேறுபட்ட பாடங்கள் கொண்டு அவற்றிற்கேற்ப உரைகொண்டியங்குவது.

கூன்கை" என்று பாடம் ஒதுவாருமுளர் (1077): 'பதியிற் கலங்கிய மீன் ' என்று பாட மோதி (1116); 'ஒப்புரவாண்மை' என்று ஒப்புர விற்கே போக்குவாருமுளர் (480) என்று பிறர் பாடங்களையும், கருத்துக்களையும், இவர் குறித்துள்ளார்.

தொல்காப்பிய நூற்பாக்களை (11:26, 1127, 11:28, 1129) குறளுரைகளிலும், காமத்துப்பால் உரைத்தொடக்கத்திலும், இறையனார் களவியல் சூத்திரம் காமத்துப்பால் 8-பிரிவாற்றாமை என்ற அதிகாரத் தலைப்பு