உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இலக்கியக்கேணி

உலகியலறிவு

'சுற்றங்தழால் ' என்ற அதிகாரத்தில், ' விருப்பறாச் சுற்றம்' என்ற குறளுரையில் மக்களை ஓரிடத்தே கொண்டிருக்க வேண்டும், அதனானே குலம் வளரும்' உழைப்பிரிந்து ' என்ற குறளுரையில் இது மீண்டு வந்த இராஜபுத்திரனேடு செய்யும் திறன் கூறிற்று'; 'தமராகி ' என்ற குறளுரையில் இது விட்டுப் போன புத்திரனைக் கூட்டிக்கொள்ளுமாறு கூறிற்று'; " 'காக்கை கரவா' என்ற குறளுரையில் இது மக்கள் பலர் உண்டானல் எல்லார்க்கும் பகுத்து உண்ணக் கொடுக்கவேண்டும் என்றது; இவை மூன்று பாட்டா னும் அன்பு அறாத மக்கட்குச் செய்யுங் திறன் கூறிற்று'; 'பொது நோக்கான் ' என்ற குறளுரையில் மக்கள். பலருண்டானல் எல்லாரையும் ஒக்கப் பாராது நீதிமான் ஒருவனை இளவரசாக்க வேண்டும் என்றது' , ' குடி செயல் வகை ' என்ற அதிகாரம் அமரகத்து ' என்ற குறளுரையில் குடியாகிய பாரத்தைப் பொறுப்பது, ஒரு குடிப்பிறந்தார் பலருளராயினுல் அவருள் மூத்த வர்க்குக் கடனே எல்லார்க்கும் கடனோ என்றார்க்குக் கூறப்பட்டது '-என்ற கூற்றுக்கள் இவர்க்கேயுரியன வாய் அமைந்துள்ளன. இவை இவருடைய உலகிய லறிவை நன்கு விளக்குவனவாம்.

பரந்த நூலறிவு

'காநலன்' என்ற குறளுரையில் ' சொல்வலை வேட்டுவன் ' என்ற புறநானூற்றுச் செய்யுட் பகுதியும். 'அரங்கின்றி' என்ற குறளுரையில் ' புல்லாவெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்ற நாலடிப் பாடற் பகுதியும், தலை இடைகடையான தூதர் இலக்கணம் கூறுமிடத்துப் பாரத வெண்பாப் பாடற் கருத்தும்,