பக்கம்:இலக்கியக் கேணி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இலக்கியக்கேணி

வரைந்துள்ளதையும் எம்மருங்கும் கண்டார் : : இப். பந்தர் இப்பெயரிட்டு இங்கு அமைத்தார் யார்?' என்று. கேட்டார்: “ ஆண்ட அரசு எனும் பெயரால் செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்தமைத்தார் ' என்று அங்கிருந்தவர் கூறினர்; அவர் எங்கேயுள்ளார்.' என்று திருநாவுக்கரசர் கேட்டார் : "அவர் இவ்வூரவரே; இப்பொழுதுதான் வீட்டுக்குச் சென்ருர்; அவர் விடும் அருகில்தான் இருக்கிறது” என்றனர்.

திருநாவுக்கரசர் திங்களுரை அடைந்தார்: அப்பூதியைக் கண்டு,

"ஆறணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர்வைத்த
ஈறில்பெருந் தண்ணிர்ப்பந் தரில்நும்பேர் எழுதாதே
வேருெருபேர் முன்னெழுத வேண்டியகாரணம் என்கொல் :

என்று வினவினார். அப்பூதியடிகளார்,

"நன்றருளிச் செய்திலீர் நாணில் அமண் பதகருடன் ஒன்றியமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டின் உறைப்பாலே வென்றவர்தம் திருப்பேரோ வேறொருபேர் :"

என்று கூறிச் "செம்மைபுரி திருநாவுக்கரசர் பெயர்" எழுதியமைக்குக் காரணமும் கூறினார். இங்ஙனம் திருநாவுக்கரசர் பெயரையே கூறியும், எழுதியும், தண்ணிர்ப் பந்தர் வைத்துப் போற்றியும் இறைவனதருள் பெற்றார் அப்பூதியடிகளார்.

கல்லெழுத்துக்களிற் புனற்பந்தர்கள்

முதலாம் இராசராச சோழனது 29 ஆவது ஆட்சி ஆண்டில் (கி. பி. 1014) உக்கல் என்ற ஊரில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/7&oldid=1557194" இலிருந்து மீள்விக்கப்பட்டது