பக்கம்:இலக்கியச்சுவை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

________________

31 சமுதாய வளர்ச்சிக்காக, மாற்றத்திற்காக, புரட்சிக் காக, பெருவாரியான மக்களின் முன்னேற்றத்திற்காக நிற்கும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் சமுதாயத்தை விக்க சென்றகால இலக்கியத்தின் சிறந்த வாரிசுகளாக உள்ளோம். ஊக்கு இன்று உலகிலுள்ள மிகச் சிறந்த உயர்ந்த கலை ஞர்கள் கம்யூனிஸ் யக்கத்தின்பால் நிற்கிறார்கள். தலைசிறந்த உலகப் பாடகன் பால் ராப்சன் கம்யூனிஸ்டு. தலைசிறந்த ஓவியக் கலைஞன் பிக்காசோ கம்யூனிஸ்டு. தலைசிறந்த எழுத்தாளன் லூ யி ஆர்கான் பாப்லோ நேருடா. கம்யூனிஸ்டு. தலைசிறந்த உலகக் கவிஞர்கள் நசீம்ஹிக்மத் கம்யூனிஸ்டுகள். தமிழ்நாட்டுக் கவிஞன் பாரதி 'பாரத சமுதாயம் பாட்டில் முப்பது கோடி முழுமைக்கும் பொதுஉடைமை கோரினான். அவனது நுண்மாண் நுழை புலத்தான் பொதுவுடமைதான் சிறந்தது என்பதை உணர்ந்தான். கவி தாகூர் சோவியத் யூனியன் சென்று திரும்பிய பின், 'சோஷலிச சமுதாயம் உலகுக்கோர் வழிகாட்டி எனப் போற்றினார். கம்யூனிஸ்டுகள் கலை இலக்கியத் துறையை அலட் சியப்படுத்தவில்லை. கேரளத்தில் கம்யூனிஸ்டு தலைவர்கள் தாமோதரன், இ. எம். எஸ்., தோப்பில் பாசி லக கியத் துறையில் முன் நிற்கிறார்கள். அதேபோல் ஆந்திரத் லும். தமிழ் நாட்டில் கொஞ்சம் பலஹீனமாக இருந்த போதிலும் வெகு சிரத்தையுடன் பாடுபட்டு உறுதியுடன் முன்வந்து கொண்டிருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/35&oldid=1480303" இலிருந்து மீள்விக்கப்பட்டது