பக்கம்:இலக்கியச்சுவை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

20 என்ற அடியிலும்‌ காணக்‌ கிடக்கும்‌ பொருள்‌ கருத்துக்களை உன்னி உன்னி ஒர வேண்டும்‌.

செறிந்த

அத்தோடு,

““உள்ளத்துள்ளது கவிதை-இன்பம்‌ உருவெடுப்பது கவிகை தெள்ளத்‌ தெளிந்த தமிழில்‌- உண்மை தெரிந்துரைப்பது கவிதை?” என்ற கவிமணியின்‌ கவிமணியும்‌ கருதத்‌ தக்கது.

விட்மன்‌, பிளக்கனோவ்‌, தாகூர்‌, பாரதி, கவிமணி ஆகிய கவிஞர்‌ பெருமக்களின்‌, விமர்சனப்‌ புலவர்களின்‌ மேற்கூறிய கருத்துக்களை ஒருசேர வைத்துக்‌ கொண்டு இந்த நூலை “ரகுநாதன்‌ கவிதைகளை - எடை போட்டுப்‌ பார்க்க வேண்டும்‌.

கவிதைச்‌ செல்வத்தில்‌ தமிழன்னைக்கு ஒப்பாரும்‌ மிக்‌ காரும்‌ உலகில்‌ இல்லை என்று துணிந்து கூறலாம்‌. பாட்‌ டில்‌ பல்வேறு வண்ணங்களுக்கும்‌, சொற்சுவை, “பொருட்‌ சுவை, கருத்தாழங்கள்‌ ஆகிய அழகுகளுக்கும்‌ தமிழ்‌ மொழி வற்றாத பொய்கை. வள்ளுவன்‌ இருக்கட்டும்‌, சங்க காலச்‌ சான்றோரும்‌. காப்பிய காலப்‌ புலவர்களும்‌ இருக்கட்டும்‌. கவிதையில்‌ பக்திப்‌ பெருவெள்ளம்‌ பாய்ச்சிய ஞானசம்பந்தரும்‌, நாவுக்‌ கரசரும்‌ நம்மாழ்வாரும்‌ இன்னபிற நல்லிசைப்‌ புலவர்களும்‌ இருக்கட்டும்‌, அபிநய கவிநாதன்‌ கம்பனும்‌ ஜெயங்கொண் டாரும்‌ கூத்தனும்‌ வில்லியும்‌, குறவஞ்சி ஆசிரியரும்‌ கோபால கிருட்டினருப்‌ போகட்டும்‌! பாரதிக்கும்‌ கவிமணிக்கும்‌ பின்பு இன்னும்‌ எத்தனை எத்தனையோ தமிழ்க்‌ கவிஞர்கள்‌ கவிமழை பொழிந்து

கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌. புதுச்‌ சுவையோடு உருவங்களில்‌

புதிய

கருத்துக்களைப்‌

பாடுகிறார்கள்‌. இளங்கவிகளும்‌

புதிய

பாடுவதாகத்தான்‌

புத்தம்‌ புதியவராக

நான்‌

தவறாமல்‌ காட்சிஅளித்துக்கொண்டுதான்‌ இருக்கிறார்கள்‌.

டர்‌ ஹு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/54&oldid=1522997" இலிருந்து மீள்விக்கப்பட்டது