பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீவகன் விடுத்த தூதன்

113

வரோ? உலகமுழுதும் அழிந்தொழியும் கடையூழிக் காலத்தில், தனக்கு ஏற்படும் தனிமையைப் போக்கிக் கொள்வதற்கே இறைவன் திருவாசகத்தில் ஒரு பிரதியெழுதி வைத்துக்கொண்டான். ஓதுவார் உள்ளத்தையெல்லாம் உருக்கி, அவர்கள் உயிரைப் பற்றிய ஆணவம் முதலான குற்றங்களையெல்லாம் ஒழிக்கும் பெற்றி வாய்ந்த திருவாசகத்தில் பற்றுக் கொண்டோர் கண்மூடிக் கடுந்தவம் புரிய வேண்டுவதில்லை. இவை போன்ற பல அரிய கருத்துக்களைக் கொண்டொளிரும் தமிழ்த்தெய்வ வணக்கம் தமிழறிஞர் பலரும் ஒருங்கே பாராட்டும் உயர்வுடையது.

மனோன்மணீய நூலின் அமைப்பு

இந்நால் லிட்டன் பெருமகனாரால் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் கவிதைக் கதையைத் தழுவி இயற்றப்பட்டதாகும். எனினும் ஆசிரியர் தமிழ் நாட்டுக்கு ஏற்ற வகையில் வாழ்த்து வணக்கங்களுடன் நூலைத் தொடங்குகிறார். நூற்பயனாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் விளங்கவும், மலை, கடல், நாடு, வளநகர், பருவம், இருசுடர்த் தோற்றம் முதலியவற்றை இடத்துக்கு ஏற்ற வகையில் அமைத்து நூலை ஆக்கியுள்ளார். மந்திரம், தூது, வெற்றி முதலிய அரசியல் நிகழ்ச்சிகளையும் இடையே கலந்துள்ளார். அங்கம், களம் என்னும் பாகுபாடுகளோடும் மங்கல முடிவோடும் நூலை ஆசிரியர் முடித்திருப்பது பாராட்டற்பாலது.

மனோன்மணீயத்தில் சிவகாமி சரிதை

மேலும், ஆசிரியர் இந்நாடக நூலுள் ‘சிவகாமி சரிதை’யென்னும் கிளைக்கதை யொன்றைப் புகுத்தி