உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

இலக்கியத் தூதர்கள்

செய்யும் அம் மாயையின் வல்லமையை என்ன வென்று சொல்வது! ‘ஆறுகோடி மாயா சத்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின’ என்று மணிவாசகப் பெருமானும் பேசியுள்ளார். எனினும், இறைவனது அருட்சத்தியானது முடிவில் மாயையின் ஆற்றலையழித்து, உயிரின் தற்போதத்தைக் கெடுத்து, அதனைத் தன்வயமாக்கிக் கொள்ளும் என்பது இந் நூலின் முடிந்த பொருளாகும். இந்நூலில் சுந்தர முனிவரின் சீடர்களாக நிட்டாபரர், கருணாகரர் என்னும் இருவர் வருகின்றனர். இவர்களை முறையே வேதாந்தியாகவும் சித்தாந்தியாகவும் கொள்ளலாம். பாண்டியனுக்கும் சேரனுக்கும் போர் மூண்டதனை அறிந்தபோது கருணாகரர் பரிவுற்று இரங்குகிறார். அது கண்டு நிட்டாபரர் கட்டுரைப்பதும், அதற்கு மாறாகக் கருணாகரர் கூறுவதும் வேதாந்த சித்தாந்த உண்மைகளைத் திரட்டி யுரைக்கும் இரு விரிவுரைகளாக விளங்குகின்றன.

மனோன்மணியின் கனவும் முனிவர் வரவும்

பாண்டியன் மகளாகிய மனோன்மணி ஒரு நாள் இரவு உறங்கும்பொழுது கனவொன்று கண்டாள். அக்கனவில் சேர வேந்தன் புருடோத்தமனைக் கண்டு, அவனது பேரெழிலில் மனத்தைப் பறிகொடுத்தாள். அவனையன்றிப் பிறரை மணப்பதில்லை யென்றும் மனவுறுதி பூண்டாள். அதனால், அவள் உணவு கொள்ளாது நினைவு நோயால் பெரிதும் உடல் மெலிந்து வாடினாள். இந்நிலையில் மன்னவன், சுந்தர முனிவருடன் அந்தப்புரம் அடைந்து, மகளின் நிலையைக் கண்டு மனமுடைந்தான். மனோன்மணியின்