பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடனே இராஜகோபால் பிடித்துக் கொண்டான். 'சப்தமாப் பேசாதேன்னு சொன்னா கேட்கறியா? எங்கக்கா காதில விழுந்தா அவ்ளோதான். நீ பார்த்தது உண்மைதான் என்றான் அடிக்குரலில். . 'அப்போ செட்டியார்கிட்ட பணம் கேட்கப் போறது?’ 'அதெல்லாம் சும்மா...' 'அப்படின்னா எதுக்கு வாராவாரம் போறே?” "எங்கம்மா அரிக்கிறாங்களே...' "அதைக் கேட்கலைடா. அந்த நேரத்துல டைம் பாஸுக்கு என்ன செய்வே?’’ "அது ரகசியம்.” "ஏ... சொல்டா...' "சொல்றேன்ல சீக்ரெட்னு." "நான் உங்கக்காகிட்டே கேட்டுக்கறேன். எனக்கென்ன?” 'ஏய்... வேணாம்... அப்படில்லாம் எதுவும் செய்துடாதே... நான் சும்மா டைம் பாஸுக்காக இன்டர்நெட் பார்ப்பேன்." ஒப்புக் கொண்டான் இராஜகோபால். ஆனால் விரிவாக அல்ல. உள்ளே ஏதோ விஷயம் முடியிருக்கிறது என்று கேசவனுக்குப் புரிந்தது. 2 : "ஏதும் சொல்லிடாதே" என்று கிசுகிசுத்தான் இராஜகோபால். இதற்குள் சமையல்கட்டிலிருந்து ரோஸ் நிறப் புடைவையில் சிவானியின் அழகு புலப்பட்டது. - மாதுளம்பூவின் கீழ்பாக நிறம் மென்மையான சிவப்பிலும் மேற்புற இதழ்களில் ஆழமான ரத்தச் சிவப்பும் இருப்பது போல பொருத்தமான ஜாக்கெட். வாழ்க்கை எப்போதுமே அழுத்தமுடையது. அழுத்தங்கள் இல்லாமல் செயல்கள் நீர் மேல் மிதக்கும் பூவினைப் போல் மிதந்து செல்வதில்லை. . . ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பின்தளத்தில் ஒருவிதமான அழுத்தம் தேவைப்படுகிறது. - இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 23