உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம்மா! நான் மீட்டுடுவேன் செட்டியார்கிட்ட” என்ற வரி மட்டும் காதில் விழுந்தவராக - . 'என்னடா ராஜா செட்டியார் அது, இதுன்னு பேசறே?’ என்று மென்மையாகக் கேட்டார். அவன் ஏதும் பேசாமல் இருக்கவே சிவானி முகத்தை நோக்கினார். "அப்பா! கிருத்திகா அழறாப்ல இருக்கு... நான் உள்ளே போயிட்டு வரேன்” என மறைய முற்பட்டாள். 'இரு... இரு சிவானி’ என்றான் இராஜகோபால். திரும்பிப் பார்த்தாள். 'இன்னொரு நோட்டு தரானாம்' என்றபடி கேசவனிடம் வாங்கி நீட்டினான். காது கேளாத தந்தைக்கு கவிதை நோட்டு பற்றி ஞானமில்லை. சர்க்கரை பாதிப்பில் தவிக்கும் அந்தத் தாய்க்கோநாட்டமில்லை. 'கவிதை நோட்டா?’ என்றாள் சிவானி சுவாரஸ்யமில்லாமல். அப்படி நடந்து கொண்டால் கேசவனின் தலை நிமிரும் என்று எதிர்பார்த்தாள். கேசவன் கண்கள் தரை பார்ப்பது நின்ற பாடில்லை. 'நிமிரு கேசவன்' என்றாள் அதிக சப்தமில்லாமல். அதிகமாக உரத்துப் பேசாமல் 'கீசுகீசு என்றும் இல்லாமல் உரிமை கலந்த சிநேகிதம் தொனித்தது அதில். - 'கேசவன் உனக்குள்ளே ஏதோ இருக்கு' எனப் புகழ்ந்ததும் அவ்வீட்டினர் அவனை ஒருவிதமாகப் பார்த்தார்கள். இப்போது கேசவன் அரைத் தலை நிமிர்த்தியிருந்தான். கண் பார்த்தால் தானே! தனக்குள்ளே ஆழ்ந்து போகும் பார்வை எதிரில் நின்றுபேசுவோரை எப்படி அடையும்? தரை மீதே பார்க்கும் பார்வைக்காரனிடம் யார்தான் உரையாட விருப்பம்கொள்வார்கள்? . - கடவுள் சிற்பத்தில் இருக்கலாம். அந்த முகம் பார்வை... அது அழகு... மனிதருக்கு அது உதவாது. - 'நிமிரு கேசவன்' என்றாள் இடுப்பில் உள்ள குழந்தையின் அழுகை நடுவே. . - 'அக்கா! இவனை காலேஜ்ல பொட்டைன்னு சொன்னாங்க." இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 27