பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரக்குந்து (லாரி), மகிழ்வுந்து (கார்), கரட்டுந்து (ஜீப்) என்றெல்லாம் பலவாகக் குறிப்பிட வாய்ப்பமைந்த மொழி, நம் தமிழ்மொழி. தமிழுக்கு ஒரு தகுதியில்லை - அது தனிமொழி இல்லை; கலப்பு மொழி என்று ஒர் எழுத்தாளர் - தமிழையே பெயராக உடையவர் எழுதியுள்ளார். பல காலங்களில் அந்நியர் பலரின் ஆட்சியால் ஏற்பட்ட பேச்சு வழக்குக் கலப்படச் சொற்களை அவர் குறிப்பிடுகிறார். பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசுவது நம்முடைய குறையேயன்றித் தமிழின் குறை யன்று. வழக்கத்தில் உள்ள எந்தச் சொல்லுக்கும் தூய தமிழ்ச் சொல் உண்டு. . - ஜன்னல் என்பதைக் காலதர் என்றும், மேகத்தை முகில் என்றும், வில்லனைக் கேடன் என்றும், பந்த் என்பதை முற்றடைப்பு என்றும், அன்அப்ப்ோஸ்ட் என்பதை எதிரிலி என்றும், சோபாவை மெத்திருக்கை என்றும், ஐஸ்கிரீமைப் பனிப்பாற்குழைவு என்றும் சொல்லலாமே. (இப்படியே நிரம்ப எழுதலாம்; எடுத்துக்காட்டாகச் சிலவற்றைச் சுட்டி னோம்). தமிழின் சொல்வளம் பற்றிச் சொல்லும்போது ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். தமிழில் உள்ளது போல் பொருளையும் அப்பொருளின் பருவத்தையும் குறிப்பிடும் தன்மை பிறமொழிகளில் இல்லை. எடுத்துக்காட்டாக துளிர், தளிர், இலை, பழுப்பு, சருகு என்பன ஒரே பொருளின் வேறு பட்ட நிலைகளைக் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் சொல்வ G&sispirgo Young Leaf, Green Leaf, Yellow Leaf, Dry Leaf என்று ஒட்டுச் சொற்களைச் சேர்த்துத்தான் குறிப்பிட முடியும். குணமென்னும் குன்றேறிநின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. (29) உயர்ந்த குணமலையாக விளங்குபவர் நொடியளவு கூடச்சினம் கொள்ளார். ருநீராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 39