பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவம். கவிதையின் கருப் பொருளுக்காகவே கவனிக்கப்பட்டவன் நான். அதற்கான தேடலில் இன்றும் இயங்குகிறேன். எழுத்தோடுதான் என் நாள்கள் நகர்கின்றன. - புதுக்கவிதைக்கு உங்களை விட்டால் ஆளில்லை என்பது மாதிரி பேசுகிறீர்கள். அதற்கு இப்போது என்ன அவசியம்? வேடிக்கையாக இருக்கிறது. புதுக்கவிதையை மக்களின் பொருளாக ஆக்கியது நான் ஒருவன்தான். முத்தமிழ்க் காவலர் கலைஞர் ஒருமுறை என்னிடத்தில் கூறினார். 'கறுப்பு மலர்கள் போல இனி யாரும் எழுத முடியாது. ஏன் நான்கூட அப்படி எழுத முடியாது' என்றார். மண்வாசனை எழுத்தாளர் கி.ரா.வும் ஒருமுறை, "உலகத்தில் வருகின்ற எல்லா இதழ்களிலும், நூல்களிலும் இருக்கிற கவிதைகளை விடவும் உங்கள் கவிதைகள் உயர்ந்தவை என்றார். புதுக்கவிதை என்றதும் நா. காமராசனை உங்களால் முன்னிறுத்த முடியாவிட்டால் உங்கள் இலக்கிய உணர்வை என்னால் சந்தேகமாகத்தான் பார்க்க முடியும். உங்கள் வருகையால் இலக்கியம் எத்தனை 'இஞ்ச்" வளர்ந்தது? ஆழமான விமர்சனப் பார்வையில் பார்த்தால் நானும், கம்பனும் தான் கவிதைக்கு அத்தாட்சி. இது எப்படியென்று ஊருக்கே தெரியும். கம்பனைத் தவிர ஏனைய பழம் புலவர்கள் சம்ம மில்லையா? - கம்பனைத் தவிர பழம் புலவர்களில் யாரோடும் எனக்கு சமாதானமில்லை. வேறு யாரும் பெரிய ஆளில்லை என்பது என் எண்ணம். இந்த வரிசையில் வள்ளுவனையும் வைத்துக் கொள்ளுங்கள். சிறப்பினும், செல்வமும் ஈனும்; அறத்தினுஉங் காக்கம் எவனோ உயிர்க்கு. (31) அறம் புகழையும் தரும்; பொருளையும் தரும்: ஆதலால், உயிர்க்கு நலமாவது, அதுவே. ரீராம் சிட்ஸ் தமிழ்நாடு (பி) லிமிடெட் இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005 49