பக்கம்:இலக்கியப்பீடம் 2005.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இப்படியும் சொல்கிறீர்களே... அப்படியும் சொல்கிறீர்களே? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பத்தாண்டுகளாகவே படிப்படியாக நம்பிக்கை குறைந்து வருவதை நான் உணர்கிறேன். எதிர்பாராத அதிர்ச்சி ஏற்படும்போது, நம்பியவர் கெடுதலைச் செய்யும்போது, குடிலன்கள் அருகே இருப்பதை அறியாதபோது வேறு எப்படித்தான் நினைப்பது? வித்வான் வே. லட்சுமணன் மறைவுச் செய்தியைக் கேட்டபோது மனத்தில் இறங்கிய இடி முதலில் கூறிய நம்பிக்கை அஸ்திவாரத்தை உலுக்கத் தொடங்கிவிட்டது. நீண்ட நாள்களாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், மரணத்துடன் போராடுபவர்கள், மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் மறையும் போது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படுவதில்லை. ஆனால், சென்ற நான்கைந்தாண்டுகளாக அடையும் அதிர்ச்சியைச் சொல்லில் வடிக்க முடியவில்லை. 3 - எவ்வளவோ நண்பர்கள் மறைந்திருக்கிறார்கள். "ஐயோ அப்படியா?' என்று ஒருகணம் வருத்தப்படுமளவுக்கு மட்டும் அறிமுகமானவர்கள் காலமாகியிருக்கின்றனர். ஆனால், இங்கே குறிப்பிடும் என் உயர் நண்பர்கள் மரணம் என்னைப் பாதித்து விட்டது. கல்கி, ஏ.கே. செட்டியார், பொ. திருகூடசுந்தரம், சின்ன அண்ணாமலை, விந்தன், சாண்டில்யன், ம.பொ.சி. மறைந்தபோது மனம் வருந்தினேன். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று மட்டும் எழுதி, பேசியதோடு நின்றேன். ஆனால், எஸ். வேங்கடசுப்பிரமணியம் என்றழைக்கப்பட்ட 'ஜெயரதன், நா. ராமச்சந்திரன், ஆடிட்டர் இராஜகோபாலன், குன்றக்குடி பெரியபெருமாள் இறந்த செய்தி கேட்டபோது பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. மேலே குறிப்பிட்டவர்கள் இறந்து விடுவார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அதிலும் வித்வான் வே. லட்சுமணன் அகால மரணம் என்னைப் பெரிதும் பாதித்துவிட்டது. அதனால்தான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நம்பிக்கை இழந்தேன்' என்று புலம்பத் தொடங்கினேன். பத்திரிகை உலகில் எனக்கு ஒரு தகுதியை ஏற்படுத்தக் காரணமானவர் வித்வான் என்று சென்ற கட்டுரைகளிலேயே சொன்னேன். வேப்பத்தூரில் என் நண்பர் ஸுபா திருமணத்தில் முடிவு 62 இலக்கியப்பீடம் - அக்டோபர் 2005