பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறநானூறும் கல்வெட்டுக்களும் 1. தோற்றுவாய் புறநானூறு என்பது சங்கத்துச் சான்றோர் பலரால் இயற்றப்பெற்றுக் கடைச்சங்கத் திறுதிக் காலத்தில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இஃது அறமும் பொருளும் நுதலிய புறத்திணைகளுக்குரிய துறைப் பொருள் அமைந்த நாளறு பாடல்கனத் தன்னகத்துக் கொண்டுள்ளமையின், 'புற நானூறு' என்னும் பெயர் எய்திற்று. இதனைப் 'புறப்பாட்டு' எனவும் 'புறம்' எனவும் வழங்குவதுண்டு. இந்நூலின் கடவுள் வாழ்த்து , பாரதம் பாடிய பெருத் தேவஞரால் இயற்றப்பட்டது. மற்றப் பாடல்கள் முரஞ்சியூர் மூடி நாகராயர் முதல் கோவூர் கிழார் இறுதியாகவுள்ள புலவர் பலரால் பாடப்பெற்றவை, இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாவர் என்பது தெரியவில்லை. இந் நூலிலுள்ள பாடல்கள் எல்லாம் அகவற்பாக்கள் மதுரைமா தகரிலிருந்த கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையாதலின், அக்காலப் பகுதி. --