பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16.) 13. தலைச்சங்காடு பெருங்கோயில் 14. திருக்கச்சூர் ஆயாக்கோயில் 15. திருக்கடம்பூர் காக்கோயில் ஞாழற்கோயில் 17. திருக்கருப்பறியலூர்.... .... கொகுடிக்கோயில் 18. திருமீயச்சூர் இளங்கோயில் 19. பா --- மணிக்கோயில் 20. பெண்ணாகடம் - தூங்கானைமாடம் 1. ஈச்சுரம்:- இங்குக் குறிக்கப்பெற்ற கோயிற் பெயர்களுள் 'ஈச்சுரம்' என்று முடிவான சில. அவற்றுள், காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் என்பது பல்லவ மன்னன் ஒருவன் திருப்பணி புரிந்து வழிபட்ட தாகும். இங்கனமே, பட்டி, தாடகை என்போர் வழிபட்டகோயில் கள் முறையே பட்டீச்சுரம், தாடகேச்சுரம் என்று வழங்கப் பெற்றன. பிறவும் இத்தகைய வே. பதினொன்றும் நூற் நாண்டின் முற்பகு தியில் முதல் இராசராசசோமுலும் அவனது மகனும் எடுப்பித்து வழிபட்ட கோயில்கள் முறையே இராசராசோசுரம், கங்கை கொண்ட சோழேச் சுரம் என்று வழங்கப்பட்டுவருதல் இதற்குச் சான்றாகும். குறுநிலமன்னர் அமைச்சர் முதலாஞேர் தம் அரசர் பெயரால் கோயில் எடுப்பித்து தியத் தங்கள் விடுவதும் பழைய வழக்கமாகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திய தலைவாகளுள் ஒருவனான இலங்கேசுவரன் ஆகிய உத்தமசோழவாண கோவரையன் என்பான் கீழைப்பழு ஒரில் கி. பி. 1102ல் ஒரு கற்றா எடுப்பித்து அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழி பாட்டிற்குத் தில்லைக்குடி என்ற ஊரையும் இறையிலியாக அளித்துள்ளான். (Ias. Nos. 390, 392 & 393 of 1924) இவ்