பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 43 வழங்குவர். இவை பற்றி விரிவாகப் பேசுவதற்கு நேரம் இல்லை. சுருக்கமாக ஒன்றை மட்டிலும் வலி யுறுத்த விரும்புகின்றேன். தமிழர் சுவைகளை எண் வகையாகக் கூறுவர், வடமொழியாளர் அவற்றை ஒன்பது வகையாக உரைத் திடுவர். வடமொழி தமிழ் 1. சிருங்காரம் క_ 6) డ జీ 2. கருணம் அழுகை 3. வீரம் பெருமிதம் 4. ரெளத்திரம் வெகுளி 5. ஹாஸ்யம் நகை 6. பயானகம் அச்சம் 7. பீபத்ளலம் இழிவரல் 8. அற்புதம் மருட்கை 9. சாந்தம் (நடுவுநிலை) இவற்றுள் சாந்த இரசம் உலகியலின் நீங்கியார் பெற்றியாகலின், அதனை யொழித்து ஏனைய எட்டனையுமே பரத முனிவர் தமது நூலில் கூறி யுள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனாரும் அவ்வாறே எண் சுவையையே கூறுவர். உலகியல் நிகழ்ச்சிகள் : உலகியல் நிகழ்ச்சிகளால் உண்டாகும் இன்ட்த்தை சுவை, (ரலம்) என்று கொள் ளுதல் பொருந்தாது. காரணம், ஒரு சுவைக்குக் கூறும்

భsuభ*.-.sts&cr:ూడ<Sk.నాగడవడా

41. என் நூலாகிய பாட்டுத்திறனில்: (ஸ்டார் பதிப்பகம், பெரிய தெரு திருவல்லிக்கேணி, விென்னை-5) என்ற நூலில் சுவைகள்’ என்ற 17-ஆம் இ ய லி ல் விரிவாக விளக்கம் பெற்றுள்ளது. ஆண்டுக் கண்டு கொள்க.