பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இலங்கை எதிரொலி


அடைந்த பிறகு நாங்கள் கேட்ட கேள்வியல்ல. அதற்கு முன்பிருந்தே கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில் வெள்ளையன் ஆட்சியிலேயும் நாம் கொடுமை படுத்தப்பட்டோம். வெள்ளையருக்கேகூட வடவர் மேல் அன்பும் தென்னவர்மேல் வெறுப்பும் இருக்கத்தான் செய்தது என்பதை பல நிகழ்ச்சிகளின்மூலம் தெரிந்துக் கொண்டிருந்தோம். அவன் ஆட்சி ஒரே தன்மையில் நடக்கவில்லை. மேலும் அன்றும் வடநாட்டு பண முதலைகள் தென்னாட்டை வேண்டியமட்டும் சுரண்டிக் கொண்டிருந்தனர். ஆகவே அன்று ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக நாட்டுப் பிரிவினை வேண்டுமென்றோம். நாடு சுதந்திரமடைந்த பிறகு இவர்கள் விவேகிகளாக இருந்திருந்தால் என்ன செய்திருக்கவேண்டும். வளர்ந்து வரும் நாட்டுப்பிரிவினைத் திட்டத்தைக் கைவிடவேண்டிய அளவுக்கு சமாதான முறையிலே குறைகளைக் களைந்திருக்க வேண்டும். களைந்தெறிவதற்கான முயற்சிகளேயாகிலும் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். நாடு சுதந்திரமடைந்த ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்குள்ளாவது ஒரே நாடு என்ற தன்மையும் நம்பிக்கையும் ஏற்படுகின்ற முறையில் வடநாட்டுத் தலைவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அதற்கான அறிகுறிகள் ஒன்றுமே இந்த ஏழு ஆண்டுகளாகக் காணவில்லை. இன்னும் சொல்லப் போனால், மூட்டை முடிச்சுகளோடு கப்பலேறிச் சென்ற வெள்ளைக்காரனே மீண்டும் வந்துவிடக்கூடாதா என்ற எண்ணம் பல கிராமங்களிலே பரத வருகின்றது. ஏனெனில், ஐந்தாறு இட்லர்களும் ஐம்பத்தாறு முசோலினிகளும், ஐயாயிரம் லூயி மன்னர்களும், ஐம்பதினாயிரம் சார்லஸ் மன்னர்களும் ஒன்றாக உருவெடுத்து ஆட்சியை நடத்தியதைப்போல் ஆட்சி இருக்குமானால், அந்த ஆட்சியை ஒழிக்காமல் வெறென்ன செய்யமுடியும்