பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இலங்கை எதிரொலி


காரணத்தால் விரைவிலேயே சரியான வழியைக் கண்டு பிடித்து காசிக்கு வந்து சேர்ந்தார். அந்த பார்ப்பான் போல தவறான வழியையே கம்யூனிஸ்டு தோழர்கள் மக்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தால், மக்கள் புத்தி சாலிகளாக மாறும்போது சரியான வழியைக் கண்டு பிடித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே தி. மு. கழகம் கார்த்துக்கொண்டிருக்கிறது.

அந்தப் பார்ப்பனனாகிலும் காசிக்குப் போகும் உண்மையான வழியைத் தெரிந்து வைத்துக்கொண்டு வேண்டுமென்றே அப்படிச் செய்தான். இவர்களுக்கு உண்மையான வழியே தெரியவில்லை. ஒரு கட்சியின் கோட்பாடுகளை அதன் முக்கியமான தலைவர்களே தெரிந்துகொள்ளாமலிருப்பது எவ்வளவு கேவலம் என்பதை அவர்கள் உணருவதே இல்லை. இப்படி ஒரு விசித்திர கட்சியாக விளங்கிக்கொண்டிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையிலும் கொழும்பு நகரில் மாத்திரந்தான் கம்யூனிஸ்டு கட்சி இருக்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் இடையிலே அதனால் புக முடியவில்லை. காரணம் அங்கே வேரோர் கட்சி இடம் பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆனால் தி. மு. கழகம் இலங்கை ஐக்கிய தேசிய கட்சி இருக்கும் இடத்திலும். இலங்கை இந்தியர் காங்கிரஸ் கட்சி வேலை செய்து கொண்டிக்கும் இடத்திலும், இலங்கை சமசமாஜ கட்சி இயங்கிக் கொண்டிருக்கும் இடத்திலும், சோஷயலிஸ்டு கட்சி இருக்கும் இடத்திலும், தமிழரசுக் கட்சி இருக்கும் இடத்திலும், மேற்சொன்ன கட்சிகள் ஒன்றுமே இல்லாத இடத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதன் காரணமென்ன