உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 ★ இல்லம்தோறும் இதயங்கள்


போல் ஒரு துளி துளிர்த்தது, மணிமேகலையின் வாயில் விழுந்தது.

மணிமேகலை தன்னை அடக்கிக்கொண்டு அப்பாவை கட்டிலில் உட்கார வைத்துவிட்டு சற்று விலகி நின்று, அவர் முன்பு உட்காரும் நேர்த்தியை இப்போது கற்பனை செய்து, அதுவே சூன்யமாக அந்த சூன்யத்தின் சூடு தாங்காதவள்போல் சிறிது இடம் பெயர்ந்து தன்னை ஈன்றவனை-தானாக விழுந்தவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.

கட்டிலில் நிமிர்த்தி வைக்கப்பட்ட அந்த உருவம், கொஞ்சங் கொஞ்சமாக அங்குலம் அங்குலமாக பின்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மணிமேகலை பதைபதைத்து, அப்பாவைக் கட்டிலில் கிடத்தப் போனாள். அப்போது அண்ணிக்காரி குறுக்கிட்டு, "நீ சும்மா இரு. கீழ விழமாட்டாரு. கொஞ்சம் கொஞ்சமாய் சாஞ்சி விழுறது தெரியாமலே உடம்பு தலையணைக்குப் போயிடும்.” என்றாள். அப்படி அவள் சொன்னது அந்தக் கிழவர், கொஞ்சம் கொஞ்சமாக, கட்டிலில் விழுவது தெரியாமல் விழுவதை ரசிப்பதுபோல் தெரிந்தது. போயிடும் என்று சொல்லி, மாமனாரை இப்போதே பிணமாகக் கருதிவிட்டவள்போல் தோன்றியது.

மணிமேகலை அப்பாவின் முதுகைப் பிடித்து கட்டிலில் கிடத்தினாள். "இப்படித்தான் தெரிஞ்சவங்கள பாத்துட்டா போதும். கொஞ்ச நேரம் போன உயிரு திரும்புனது மாதிரி உடம்புதுடிக்கும். இன்னைக்கி இவளப் பாத்ததும் கண்ண உருட்டுனது மாதிரி எப்பவுமே இப்படி உருட்டல; இன்னிக்கிதான் கண்ணிரே வந்து இருக்கு." என்று அண்ணிக்காரி 'நேர்முக' வர்ணனை கொடுத்த போது, மகள்காரி தலையணையை எடுத்து வீசிவிட்டு தன் மடியில் தந்தையை மகனாகப் போட்டாள். கூட்டத்தினர்