பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 143


போலவும் தெரிந்தது. அவள் கஷ்டத்தைக் கேட்காமல், தன் கலியுக சிருஷ்டி வினோதத்தைப் பேசப் போனதற்கு வெட்கப்பட்டவன்போல் அதேசமயம் பிராயச்சித்தம் செய்யத் தெரியாதவன் போல் கால்களை இடறிக் கொண்டே போனான்.

மணிமேகலைக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஊருக்கெல்லாம் தானம் கொடுத்து, மிராசுதார்கள் என்றாலே ஒருமாதிரி மனிதர்கள் என்று ஆகிப்போன இந்தக் காலத்தில் இப்போதும் ஊர்மக்கள் புண்ணியவான் என்று சொல்லும்படி வாழ்ந்து இப்போ வதங்கிக் கிடக்கும் தந்தைக்கு, சகோதரர்கள் கேவலம் நிலையில்லாத காசுக்கு ஆசைப்பட்டு மாத்திரைகளை நிறுத்தியதால், மாகாளியாய் ஆனவள்போல் மாந்தோப்புச் சுவரில் சாய்ந்துகொண்டு எதையோ மெளனமாக உற்றுநோக்கிக் கொண்டிருந்த சந்திரனை நோக்கி நடந்தாள்.

“ஏண்டா! (இப்போதான் 'டா' போட்டாள்) அண்ணனுக்குத்தான் அறிவில்ல. ஒனக்கு எங்கடா போச்சு? அப்பாவுக்கு மாத்திரை வாங்க இல்லாத பணம் எதுக்காவடா இருக்கணும்?"

சந்திரன் பதில் பேசவில்லை. அவளிடம் அருணாசலக் கிழவர் பெயருக்கு வந்திருந்த ஒரு அழைப்பிதழைக் கொடுத்தான். படித்துப் பார்த்த மணிமேகலை விழித்தாள். பாமாவின் கல்யாண அழைப்பிதழ். இந்நேரம் கல்யாணம் நடந்திருக்கும். தமிழக அரசில், நெடுஞ்சாலை இலாகாவில் மாப்பிள்ளை எஞ்ஜினியராம்.

'எனக்கு ஒரு லட்டர் எழுதப் படாதா? எனக்கு உரிமை யில்லாமப் போயிட்டுதா? நான் இல்லாம காதுகுத்துக.ட நடக்காத வீட்டில், இப்போ கல்யாணமா..?

தம்பியை அவள் பரிதாபமாகப் பார்த்தாள். அதோடு, இனிமேல் அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதால்