உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 147


மணிமேகலை அங்கே நிற்கவில்லை. மெளனியாக, கண்ணீர் விடாமலே அழுகிறவள் போல் வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டருகே வந்தாள். எதிரே தங்கம்மா பாட்டி வந்துகொண்டிருந்தாள். இவள் கேட்காமலே அவள் பேசினாள்.

"அதுல போயி உட்காரும்மா. நான் இந்த சாம்பல வச்சி மந்திரம் சொல்லி தடவிப் போடுறேன். எந்த நோயி இருந்தாலும் பஞ்சாப் பறந்து போயிடும். நான் சொல்ற மந்திரம் குஷ்டத்தக்கூட குத்தி விரட்டிடும். வாடியம்மா என் ராசாத்தி வந்து உட்காரும்மா. இங்கயே உட்காரலாம். நேத்து சாம்பலோட வந்தேன். ராமலிங்கம் அடிக்காத குறையா துரத்திட்டான். உக்காரு ராசாத்தி. ஒனக்கா இந்த கதி?”

மணிமேகலை, அந்தக் கிழவியையே பார்த்தாள். மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. மனிதர்கள் இன்னும் முற்றிலும் மடியவில்லை.

மந்திரம்-மாயையில் நம்பிக்கை இல்லாத அவள், இப்போது அந்தக் கிழவியைத் திருப்திப்படுத்துவதற்காக, ஒரமாகக் கிடந்த ஒரு கல்லில் உட்கார்ந்தாள். தங்கம்மாக் கிழவி அவள் கழுத்துப் பக்கத்தில் சாம்பலைத் தடவிய போது மணிமேகலை அந்தப் பாட்டியின் கழுத்தை குழந்தை மாதிரி கட்டிக்கொண்டு விம்மினாள்.

<b13>

றுநாள் பொழுது, வேறுபட்ட பொழுதாக மலர்ந்தது.

சாமக்கோழி கூவும்போது எழுந்து, அப்பாவுக்குப் பணி விடைகள் செய்துவிட்டு, அவரது பழைய துணிமணிகளை கொல்லைப்புறக் கிணற்றில் துவைத்து