பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


அவள் வராட்டா கதாநாயகிய ஒரு கூனியா மாற்றி, அடியேனை அதுக்கும் போடுறதா நடிகர் நம்பீசன் உத்தேசிச்சிருக்காரு. என்னமோ நம்மள மாதுரி நல்லவங்களுக்கு வாழ்க்கை நாடகமாகவும், நாடகம் வாழ்க்கையாவும் போயிட்டு. அப்புறம் ஒங்க நிலைமையை யோசிக்க கஷ்டமாய் இருக்கு. சரி! ரெண்டு நாளைக்கு, எதாவது ஒரு கலைஞர் வீட்ல இருங்க. அப்புறமா யோசிக்கலாம்.”

“இல்லண்ணே. என்னை ஏதாவது ஒரு வீட்ல வேலக்காரியா சேத்துடுங்க.”

“தங்கச்சி எனக்கு என்ன வேணுமுன்னாலும் தெரியாம இருக்கலாம். ஆனா. அழத் தெரியாதுன்னு மட்டும் நினைக்காத.”

"நீங்க சொல்றது தப்புண்ணே. எந்தத் தொழிலும் கேவலமில்ல. ஒரு தடவ மிஸ்டர் ஜெயராஜோட சோளிங்கர் போயிருந்தேன். பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு அவர்-அதுதான் மிஸ்டர் ஜெயராஜ் படிச்ச ஒரு ஹைஸ்கூலுக்கு போனோம். பழைய ஹெட்மாஸ்டரே இருந்தாரு, அவருகிட்ட படிச்ச பையன் கனடாவுல ஒரு காலேஜ்ல புரபசர் வேலைக்கு போனாராம். ஹோட்டலுல அவருக்கு ‘காபி’ கொண்டுவந்த சர்வர் இன்டர்வ்யூ போர்ட்ல இருந்தாராம். அவருதான் அந்த காலேஜுக்கே பிரின்ஸ்பாலாம். ஆனால் நாம் கஷ்டமான தொழில கேவலப்படுத்தி அதைச் செய்யுறவங்களயும் கேவலமாக் கிட்டோம்.”

"ஒனக்கா இந்த கதி?"

"ஒன் கதி என்னன்னு நினைச்சிப் பார்த்தியா? மேல இருந்து கீழ வாரவங்களுக்காக இரக்கப்படுற நேரத்தை நமக்கும் கீழே இருக்க வங்களுக்காக உதவுறதுல செலவிடணும். சொல்லப் போனால் நான் ஒன்