பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 211



வாராள். அவளை இந்தக் கோலத்துல கேள்விப்பட்ட எனக்கு இன்னும் சாவுவரலியே. கை காலு முடங்கலியே. மேற்கொண்டு பயங்கரமானத கேட்க முடியாதபடி காது முடங்கலியே. அப்பப்போ வாரரத்தக் கொதிப்பு இப்போ வரலியே. அவள பாக்க முடியாதபடி கண்ணு கெடலியே!”

மணிமேகலையின் விம்மல் ரத்தினத்தை நிறுத்தியது.

"அப்பா ! என் அப்பா ! என் கடவுளே! என் கண் கண்ட தெய்வமே! நான் ஒங்க கால முடக்கிட்டேனே. கண்ணைக் குத்திட்டேனே!"

ரத்தினம் தன்னையே நொந்துகொண்டான். தன் கண்களையும் துடைத்துக்கொண்டான். சிறிதுநேரம் பேசிவிட்டுப் புறப்பட்டான்.

"இந்தாம்மா உயிலு."

"என் உயிரே போயிட்டு. இது எதுக்கு? அவங்ககிட்ட காட்டி நீயே கிழிச்சிப் போட்டுடு.”

"சரி, ஒன்கிட்ட கொடுத்தால் நீ கிழிச்சிப் போடுவ. என்கிட்ட இருக்கட்டும். அப்புறம் அந்த ஜெயராஜ் பய மேல வழக்கு போடணும். செறுக்கி மவனை கோர்ட்ல நிக்க வச்சி, நானே அவனை செருப்பால அடிக்கப் போறேன். அவன் சொத்துல நீ எப்போ பாகம் கேக்கப் போறியோ, அப்பதான் நான் இனிமே இங்க வருவேன்."

ரத்தினம் புறப்பட்டான். போனவன் திரும்பி வந்தான்.

“மணிமேகலை ! முன்னால அவன்கிட்ட நீ வாழணு முன்னு நினைச்சும், அடாபிடியாப் பேசுனது மாதிரி இப்பமும் ஒப்புக்குச் சொல்றேன்னு நினைக்காத நிச்சயமா இல்ல. ஒண்னு மட்டும் ஒப்புக்குச் சொன்னேன். அதுதான் வழக்குப் போடு முன்ன, இங்க வரமாட்டேன்னு சொன்னேன், பாரு அதுதான் புளுகு. அண்டப் புளுகு."