பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 213



தடவையாகத் திரும்பாமல், முதல் தடவையாகக் கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவள்போல் போய்விட்டாள்.

ஆல்பர்ட் ஸ்விட்சரின் படத்துக்கருகே அந்தத் தாயின் படத்தை இணையாக மாட்டிய மணிமேகலை யாரும் எதிர்க்காமலே பொறுப்புகளை மேற்கொண்டாள். சொல்லப் போனால் அவள் பழையபடியும் பெட்டி பின்ன நினைத்தாள். ஆனால் பெட்டிப் பாம்புகளாய் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தபோது வெங்கடேசன் கொடுத்த உற்சாகத்தில், அவள் உற்சாகமின்றியே பணியாற்றத் துவங்கினாள். இப்போதுதான் அப்பா செத்திருக்கிறார் அதுக்குள்ளேயே அம்மா சாவது என்றால்...?

'காபந்து சர்க்கார் மாதிரி அவள் காரியமாற்றிக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டியின் தார்மிகப் பார்வைக்கு அஞ்சி பொருளுதவி செய்த வெளிநாட்டு நிறுவனம், அங்கே அரசியல் கொந்தளிப்பில் சிக்குண்டு பணவுதவியை பட்டென்று நிறுத்தியது.

மணிமேகலை செய்வதறியாது தடுமாறினாள். அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்க வந்திருந்த வெங்கடேசன், "இனிமேல் வெளிநாட்டில் கையேந்தாமல் இதை நடத்து வதற்காக நீ பெருமைப்பட வேண்டும்” என்று சொன்ன போது, அவள் பெருமிதப்பட்டாள். விரைவில் அந்த பெரு மிதமும் யதார்த்தத்தில் பட்டு, முட்டி மோதிச் சிதறியது.

அரிசி ஸ்டாக் தீர்ந்து போயிற்று. மரச்சாமான்களை வாங்கிய பேர்வழிகள்-அந்தக் கடன்காரப் பாவிகள்அந்த மூதாட்டியின் ஈமச்செலவை தன் வீடுகளில் செய்து விட்டதுபோல் கை விரித்தார்கள். மூலப்பொருட்களை கடனுக்குக் கொடுத்து வந்த கம்பெனிகள் ரிக்ரட் செய்தன. அந்த அம்மாவுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக நன்கொடை கொடுத்தவர்கள் நல்லவர்கள். ஆகையால் கொடுத்ததைத் திருப்பிக் கேட்கவில்லை. நோயாளிகளுக்கு