பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 93


சந்திரன் கடிதம் போட்டிருந்தான். ரயில் நிலையத்தில், அவன் இரண்டு கண்களும் போனதுபோல் உணர்வதாய் சொன்னானாமே, அது இன்னும் போகவில்லையாம். அக்கா, அடிக்கடி கடிதம் போடாதது வருத்தமாம். உடனே கடிதம் போடவில்லையென்றால, ரயிலேறி வந்துவிடு வானாம்.

அட கடவுளே! இவன் வேறயா? நான் படுற பாடு போதாதா?

தம்பிக்கு உடனடியாகக் கடிதம் எழுதி, சூசகமாக வரவேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். அப்போது அந்தப் பக்கமாக வந்த பாமா அண்ணியின் கையிலிருந்ததை அர்த்தபுஷ் டியுடன் பார்த்ததும், மணிமேகலை "சந்திரன் எழுதியிருக்கான். ‘உங்கள் நினைவாய் இருக்கேன்னு’ எழுதியிருக்கான். ‘உங்கள் என்பது பன்மையா, இல்ல. அக்கா என்கிற மரியாதை ஒருமையான்னு தெரியல” என்றாள் சிரிப்பை வலிய வரவழைத்துக்கொண்டு. அது வந்தால்தானே?

பாமா, சிறிதுநேரம் அந்தக் கடிதத்தையே பார்த்தாள். அவள் கண்கள் எங்கேயோ பார்த்தன. கைகள் தானாக வங்கி மோதிரத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டன.

மணிமேகலைக்கு மகிழ்ச்சி. தன்னை விட்டு சிறிது விலகி நின்றாலும் தன் தம்பியை அவள் மறக்கவில்லை. முந்தா நாள் கூட, சங்கரன் வாங்கிக்கொண்டு வந்த கரும்பைத் தின்னும்போதுகூட, “இந்தக் கரும்பு இனிக்கல” என்று ‘இந்த’வுக்கு ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்து, வலது உள்ளங்கையை இடது கைவிரல்களை குவித்து அழுத்திய கள்ளியாயிற்றே...

பாமா போய்விட்டாள்.

இதற்குள் நாலைந்து வீடுகள் தள்ளியுள்ள ஒரு வீட்டில், அவுட் ஹவுஸில் குடியிருக்கும் கம்பவுண்டர் மணி