பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் ★ 97


“நான் அதச் சொல்லல. வசந்திக்கு பார்த்த மாப்பிள்ளை பட்டந்தான் பி.ஏ. கிம்பளம் வாங்காமல் சம்பளத்துலேயே காலந்தள்ளப் பார்க்கிறவனாம். எப்படிப்பட்டவன்? சர்க்கார் வேலையில எப்படி குப்ப கொட்டுவான்? அவன எவனும் தள்ளாம இருப்பானா என்ன? விடுங்க குப்பைய! நான் அதைச் சொல்லல. நான் சொல்ல வந்தது லட்சுமிக்கு புள்ளி வந்திருக்கு. நாளைக்கு அவருக்கு வரும். மறுநாளைக்கு இவருக்கு வரும். மறுநாளைக்கு இவருக்கு வரும். டாக்டர்கிட்ட டெஸ்ட் பண்ணுனா என்ன? என்னேன்னன்....”

ஜெயராஜ் சப்புக் கொட்டிக்கொண்டே பேசினான்:

“ஆல்ரைட்! இன்னைக்குச் சாயங்காலமே நம்ம டாக்டர் குமரன்கிட்ட செக்கப் பண்ணலாம். இப்போ திருப்திதானே?”

ராமபத்திரன் முதல் ரவுண்டில் வெற்றி பெற்ற குஸ்தி வீரன்போல் ஜாக்கிரதையாகப் புன்முறுவல் செய்தபோது, மணிமேகலை அருகில் நின்றுகொண்டிருந்த கம்பவுண்டர் மணி அங்கே வந்தான். அவனால் பொறுக்க முடிய வில்லை. “தயவுசெய்து, நான் சொல்றத கேளுங்க. நானும், லட்சுமியம்மாவோட புள்ளியப் பார்த்தேன். லேசா பஞ்சை வைத்து அழுத்துனேன். வலிக்குதுன்னாங்க. அதனால அது வெறும் பூச்சிக்கடிதான். நோயைவிட, நோய் வந்திருக்கோ என்கிற பீதிதான் மோசமானது.”

ராமபத்திரன் எகிறினார். யாரும் தடுக்க முடியாத அளவிற்கு எகிறினார்.

“பேசாம உன் வேலய பார்த்துக்கிட்டு போயேன். நீ எதுக்கு வார என்கிற சங்கதி எனக்குல்லா தெரியும்? நாளைக்கு என் மவளும், மருமக்கமாரும், கூடப் பிறந்த அக்காவும் பேரப் பிள்ளிகளும் தெருவுல விரல் இல்லாம