உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இல்லற நெறி


பாரதம் எடுத்துரைக்கின்றது. நம் நாட்டுத் தந்தை காந்தி lulossfloor Self Pestraint versus Self indulgence stairp நூலைப் படிக்க. பிரம்மச்சரியங் காத்து உண்மையான சமய வாழ்வில் ஈடுபட்டுள்ள மகான்களின் முகத்தில்-அவர்கள் கண்களில்-பேரொளி வீசுவதையும் கருத்துகளில் அறிவுச் கடர் நிழலிடுவதையும் காணலாம். தமிழ் நாட்டில் இராம கிருஷ்ண தபோவன: முனிவர் சித்பவாநந்தரின் வாழ்க்கை நமக்கு வழி காட்டக் கூடியது; அவர் வெளியிடும் தருமச் சக்கரம்’ இதழ்களில் வெளிவரும் கருத்துகள் உன் போன்ற இளைஞர்கட்கு நிறைந்த பலனைத் தரும்: வங்கம் அளித்த இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கையையும் தமிழ்நாட்டு வடலூர் வள்ளல் இராமலிங்க அடிகளின் வாழ்க்கையையும் அந்த இரு முனிவரின் பல கருத்துகளையும் இளைஞர்கள் அறிந்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை செம்மையுற அமைய வழி தோன்றும். நவீன மருத்துவமும் காண முடியாத பல உண்மைகளைப் பிரம்மச்சரியம் காத்தலால் அறியலாம்;

புணர்ச்சியே ஏற்படாமலிருந்தால் விந்தேறு குழலிலும் விந்துப் பைகளிலுமுள்ள விந்தணுக்கள் படிப்படியாக மரித்து சிதைந்து வெளியேறுகின்றன. சில பிராணிகள் புணர்ச்சி யினின்றும் பிரித்து வைக்கப்பெற்றிருக்குங்கால் இவ்வாறு மரித்துச் சிதைந்து அழிந்த விந்தனுக்கள் விந்துக்குழல்களின் மூலமும் சிறுநீர்ப்புறவழியின் மூலமும் வெளிப்படுவதைக் காணலாம். நீண்ட நாட்கள் கழித்து முதல் தடவையாகப் புணர்ச்சியில் வெளிப்படும் விந்துவில் இயக்கம் குறைந்த விந்தனுக்களே காணப்படுகின்றன என்றும், சிறிது காலமே இடையிட்ட புணர்ச்சியால் வெளிப்படும் விந்துவில் இயக்கம் மிக்க விந்தணுக்கள் காணப்படுகின்றன என்றும் மெய்ப்பிக் கப்பெற்றுள்ளது. இதிலிருந்து குழல்களில் நீண்ட காலம்

88 இவ்வனம் திருச்சி-ஈரோட்டுப் புகைவண்டிப் பாதை

யிலுள்ள திருப்பராய்த்துறையில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/110&oldid=1285130" இலிருந்து மீள்விக்கப்பட்டது