பக்கம்:இல்லற நெறி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 11?

பெண்ணுக்கு ஆழமற்ற யோனிக்குழலும் இருப்பதாக அநுபவம்மிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்; பெரும்பாலும் குழலின் ஆழமும் அகலமும் பெண் கருவுறுதலாலும் கரு வுயிர்த்தலாலுமே மாற்றம் அடைகின்றன. கலவியில்ை மட்டிலும் இந்த அளவுகளில் மிகக்குறைத்த மாற்றமே ஏற் படுகின்றது. பெரும்பாலும் உடற்கூற்றின் மாறுபாடுகள்: உள்ளக்கிளர்ச்சிகளால் ஏற்படும் தசையிறுக்கங்கள், பெண் னின் கலவியநுபவம் ஆகியவையும் இந்த மாற்றத்திற்குக் காரணமாகின்றன என்று சொல்லுகின்றனர். சாதாரண மாக விறைத்து நிற்கும்பொழுது ஆறு அங்குலமுள்ள ஆண் குறி (லிங்கம்) எவ்வாறு மூன்று அல்லது மூன்றரை அங்குல நீளமுள்ள யோனிக்குழலில் பொருந்தும் என்ற ஐயம் உன் பால் இயல்பாகவே எழலாம். இதைப்பற்றி இணைவிழைச் சின் பொறிநுட்பத்தைப்பற்றிக் கூறும்பொழுது விளக்கு வேன் கலவியின்பொழுது ஆண்குறி செல்லும்வழி யோனிக் குழல் மட்டிலும் அன்று; அவ்வழியில் பிறப்புறுப்புகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியும் அடங்குகின்றது. அது யோனிக் குழலின் வெளிப்புறமாகவுள்ள புனல்போன்ற பகுதியாகும்: இப்பகுதி சுமார் ஒன்றரை அங்குல நீளமுள்ளது. மேலும் பிறப்புறுப்புகளைச் சுற்றிலுமுள்ள இழையங்களும் யோனி குழலின் சுவர்களும் விரிந்து சுருங்கும் தன்மையனவாத லின் யோனிக்குழல் மூன்று அங்குல நீளமே இருப்பினும், பெண்ணின் இணைவிழைச்சுவழி சாதாரணமாக ஐந்து அல்லது ஐந்தரை அங்குல நீளமாக அமைகின்றது; இதல்ை ஆண்குறியும் அவ்வழியில் நன்கு பொருந்துகின்றது என் பதை அறிவாயாக.

வெளியே காணப்பெறும் பெண்ணுறுப்பில் யோனிக்

குழல் வந்து முடியும் இடம் யோனிவாய்' எனப்பெறும்: மணமாகாத பெண்களுக்கு யோனிவாயோடு ஒரு மெல்லிய

95. இழையங்கள்-Tissues. 96. Gurrgilarul–Vaginal orifice;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/123&oldid=597860" இலிருந்து மீள்விக்கப்பட்டது