பக்கம்:இல்லற நெறி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இல்லற நெறி


முதற்படம் யாதொரு தடையோ வலியோ இன்றிப் பூப் பெய்துவதை விளக்குகின்றது. இதில் கன்னிச் சவ்வு திறந்த நிலையிலுள்ளது. ஏனைய மூன்று படங்களும் பூப்பெய்துதலில் நேரிடும் கோளாறுகளை விளக்குகின்றன இரண்டாவது படம் கன்னிச் சவ்வில் துவாரம் இல்லாததன் காரணமாகக் குருதி யோனிக்குழலில் தேங்கிக்கிடப்பதை விளக்குகின்றது. இத்தகைய பெண்களின் கன்னிச் சவ்வில் மருத்துவர் செயற்கை முறையில் ஒரு துவாரம் செய்துவிட்டால் உள்ளே அடைப்பட்டுக் கிடக்கும் குருதி வெளியேறிவிடும். அதற்குப் பிறகு முறைதோறும் குருதிக்கசிவு செவ்வனே நடைபெறும். மூன்ருவது படம் தடித்த தசையாலான கன்னிச் சவ்வின் காரணமாகக் குருதி யோனிக் குழலில் தேங்கிக் கிடப்ப தைக் காட்டுகிறது. இஃது ஆபத்தினை விளைவிக்கக் கூடியது. நான்காவது படம் கருப்பையின் நுழைவாயிலில் ஏற்பட் டூள்ள தடையில்ை குருதி கருப்பையில் தேங்கிக் கிடப்ப தைக் காட்டுகின்றது. தக்க அறுவை சிகிச்சை மூலம் இத் தடைகளை நீக்க வேண்டும்:

மாதவிடாய்க் கோளாறுகள்: சில பெண்கள் மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயின்பொழுது வலியினல் தொல்லைப் படுவதற்குக் காரணம் என்ன என்று வினவியிருந்தாய்: சாதாரண நிலையில் உடல் நலமுள்ள ஒரு பெண்ணிடம் யாதொரு வலியுமின்றி மாதவிடாய் நிகழும். ஆனல், சிலரி டம் பல்வேறு நிலைகளில் வலியுண்டாகும். இடுப்பெலும்புக் கட்டுப் பகுதியில் பாரமாக இருத்தல், நோயுற்ற நிலை தோன்றுதல், எரிச்சல் போன்றவற்றிலிருந்து கடுமையான அடிவயிற்றுப் பிடிப்பு, முதுகுவலி, குடல் தொந்தரவுகள், அதிகச் சோர்வு போன்ற நிலைவரை தொந்தரவுகள் நேரிட லாம். இவ்வாறு பல்வேறு நிலைகளில் பரிணமிக்கும் வலியின் காரணங்களை இன்னும் தெளிவாக அறியக்கூடவில்லை. பிறப் புறுப்புகள் சரியாக வளர்ச்சி பெருமை, கருப்பை புறண் டிருத்தல், இடுப்பெலுபும்புக் கட்டுப் பகுதியில் வீங்கிய நிலை கள், சரியான அளவு ஹார்மோன்கள் உற்பத்தியாகாமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/150&oldid=1285150" இலிருந்து மீள்விக்கப்பட்டது