உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 153

இரண்டு எல்லை அளவுகளுக்கிடையில்தான் அளவிலும் வடிவத்திலும் வேறுபாடுள்ள உதடுகள் காணப்பெறு கின்றன.

உள் உதடுகளின் மேற்புறத்தில் உறுதியான தோல் போன்ற இழையம் காணப்பெறுகின்றது. ஆனல், அவற் றின் உட் பரப்பில் மிக நுட்பமான ஒருவகை இழையம் அமைந்துள்ளது. மேலும் இந்த உதடுகளில் அதிகமான குருதிக் குழல்களும், நரம்புகளும், சுருங்கி நீளும் இழையங்க ளும் அமைந்திருப்பதால் அவை தூண்டலுக்கு உணர்வுடை யனவாக உள்ளன; அளவிலும் சிறிய மாற்றங்களை அடையக் கூடியனவாகவுமுள்ளன. சரியான முறையில் கிளர்ச்சியேற் பட்டால் அவை விறைப்பாகவும் உறுதியாகவும் ஆகின்றன. யோனி லிங்கம்: யோனியின் மேற்புறம் இரண்டு உள் உதடுகளும் சந்திக்கும் கோணம் போன்றுள்ள இடத்தில் யோனி லிங்கம் அமைந்துள்ளது. இது யோனித் துவாரத் திற்கு (தலைவாயிலுக்கு) மேல் கிட்டத்தட்ட ஒர் அங்குல உயரத்தில் அமைந்துள்ளது. இது மிகச் சிறிதாக இருப் பினும் புணர்ச்சியநுபவத்திற்கு மிகவும் முக்கியமான உறுப் பாகும். யோனி லிங்கம் அமைப்பில் கிட்டத்தட்ட ஆண் குறியை ஒத்திருக்கின்றது. ஆனால், ஆண் குறியைவிட அளவில் சிறியது; ஆண்குறியில் உள்ளது போன்ற சிறுநீர்ப் புறவழி இதில் இல்லை. இது கால் அங்குல நீளம் உள்ளது. பொதுவாக இதன் துனி பட்டாணியைப் போன்று உருண்டி ருக்கும். பெரும்பாலும் இது விறைக்குந்தன்மையுள்ள இழை யத்தாலானது; இந்த இழையத்தில் அதிகமாகப் பரவியுள்ள நரம்புகள் தொடுபுலனுக்கும் காதல் சம்பந்தமான தூண்டு தலுக்கும் மிகவும் உணர்வுடையவை. யோனி லிங்கம் ஒரு பாலுறுப்பு என்ற முக்கியத்துவத்தைச் சென்று நூற்ருண் டில்தான் அறிந்தனர்;

எனைய வெளிப்புறப் பிறப்புறுப்புகளைப் போலவே யோனி லிங்கமும் அமைப்பிலும் வடிவத்திலும் மிக அதிக

154; சிறுநீர்ப்புற வழி-Urethra)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/159&oldid=597917" இலிருந்து மீள்விக்கப்பட்டது