உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 188

சூற்பைகளைப் பெயர்த்து நடுதல்: இன்னும், ஒரு பெண் னின் சூற்பைகளை நீக்கிவிட்டு இன்னெரு பெண்ணின் குற் பைகளை அவளிடம் நட்டால் அவளால் குழந்தை பெற முடி யுமா என்றும் நீ ஐயுறலாம். பெயர்த்து நடப்பெற்ற குற்பை தொடர்ந்து ஹார்மோன்களை உண்டாக்கும் என்ற நம்பிக் கையாலும், இதல்ை சூதக ஒய்வுக்குரிய அறிகுறிகள் தடுக் கப் பெறும் என்ற நம்பிக்கையாலும் இந்த அறுவை முறை சிகிச்சை மேற்கொள்ளப்பெறுகின்றது: எனினும், நடை முறையில் இவ்வாறு புதிதாகப் பெயர்த்து நடப்பெற்ற உறுப்புகள் படிப்படியாகச் சுருங்கி தம்முடைய செயல் களையும் இழக்கின்றன. எப்படியாயினும் புதிய சூற்பை கருக்குழலுக்கு மிக அருகில் பெயர்த்து நடப்பெருதவரை இம்முறையில் இனப்பெருக்க ஆற்றலைத் திரும்பவும் அடை தல் முடியாது. ஆனல், இத்தகைய சோதனைகள் இதுகாறும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதற்குப் பதிலாக இன்று அடர்வுமிக்க பெண் ஹார்மோன்கள் அதிகமாகக் கிடைப்ப தால், இத்தகைய சோதனைகள் மிக அரிதாகவே மேற்கொள் ளப்பெறுகின்றன:

குற்பைகளிலிருந்து நேராக இந்த ஹார்மோன்கள் பிரித்தெடுக்கப்பெறுகின்றனவா அல்லது வேறு முறையில் தயாரிக்கப்பெறுகின்றனவா என்று நீ வினவலாம்.கூறுவேன்; முதன் முதலாக இந்த ஹார்மோன்கள் சூற்பை இழையத்தி னின்றுதான் தயார் செய்யப்பெற்றன. எனினும், பின்னர் இவை பெரும்பாலும் சூலுற்ற பெண்களின் சிறுநீரினின்றே எடுக்கப்பெற்றன. சூலுற்ற நிலையில் இந்த ஹார்மோன் களின் உற்பத்தி அதிகப்பட்டு சிறுநீரில் செல்லுவதால், இவற்றை இந்த மூலத்தினின்றும் பெறலாம்:

தெளிவான வேற்றுமையுடைய இரண்டு ஹார்மோன் கள் சூற்பைகளில் உண்டாக்கப்பெறுகின்றன என்பதை ஏற் கனவே நீ அறிவாய்; முன்னர் எழுதியகடிதங்களில்இவற்றை நான் குறிப்பிட்டெழுதியுள்ளேன். ஒன்று, எஸ்ட்ரோஜென் என்பது; முட்டை முதிரும் ஃபாலிக்கிளில் இஃது உண்டா கின்றது. மற்றென்று, புரொஜெஸ்டெரோன் என்பது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/171&oldid=597931" இலிருந்து மீள்விக்கப்பட்டது