உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்! 179

பிளந்து கொண்டு இரண்டு தனி அணுக்களாக மாறிவிடுகின் றது. இவை இரண்டும் ஒன்ருேடொன்று ஒட்டிக்கொண் டுள்ளன: இவை உருவத்திலும் தன்மையிலும் தொடக்கத் திலிருந்த ஒற்றையணுவைப்போன்றே சிறிதும் மாறுதலின்றி உள்ளன. இந்த இரண்டு உயிரணுக்களும் முறையே ஒவ் வொன்றும் இரண்டாகப் பிளந்துகொண்டு மொத்தம் நான்கு உயிர் அணுக்களாக மாறுகின்றன. இந்த நான்கு உயிரணுக்களும் உருவத்திலும் தன்மையிலும் ஒன்றைப் போலவே அமைந்துள்ளன. இந்த நான்கு உயிரணுக்களும் எட்டாகின்றன. இங்ங்ணம் தொடர்ந்து இரட்டித்துக் கொண்டே உயிரணுப் பிரிவு நடைபெறுகின்றது, இவ்வாறு எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டு போகும்பொழுதுதொடக்கத்தில் பிரியும் அணுக்கள் ஏறக்குறைய ஒரே அள வாக இருப்பினும்-சில உயிரணுக்கள் உருவத்தில் பெரியன

படம்-24 கருவுற்ற முட்டை வளர்வதில் நான்கு நிலை

களைக் காட்டுதல்,

வாகவும்,சிலகிறியனவாகவும் அமைந்துவிடுகின்றன. ஆனல், குணத்திலும் அமைப்பின் தன்மையிலும் எல்லா அணுக்க ளும் ஒன்றுபோல் சிறிதும் வேற்றுமையின்றியே உள்ளன. ஒன்று இரண்டாகி, நான்காகி, எட்டாகி இவ்வாறு பல்கிப் பெருகிப் போகும் அணுக்கள் இரண்டுவார காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/185&oldid=597947" இலிருந்து மீள்விக்கப்பட்டது