பக்கம்:இல்லற நெறி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இல்லற நெறி


களையெல்லாம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஐந்தாவது மாத முடிவில்தான் புதிர்க் கதிர்ப் படத்தில் குழந்தையின் எலும்புகளின் நிழலே நன்ரு கக் காணவும் முடியும்.

வேறு சில சோதனைகளாலும் ஒரு பெண் கருப்பிணியா என்பதை அறுதியிட முடிகின்றது. கருப்பிணியின் உடலில் ஏற்படும் மாறுதல்கள் அனைத்தும் அவள் உடலில் உற்பத்தி யாகும் ஹார்மோன்கள் எனப்படும் ஒருவித சுரப்புநீர்களால் தான் உண்டாகின்றன. இந்த உட்புற நீர்ச்சத்து சிறு நீரி லும் வெளிப்படுகின்றது. காலையில் முதன் முதலாகக் கருப் பிணி சழிக்கும் சிறுநீரைச் சேகரித்து வடிகட்டி அஃதுடன் அளவோடு பழச்சருக்கரையின்க்2 திரவத்தைச் சேர்த்து அவற்றின் சில துளிகள் கருப்பமாகாத பென் எலிகளின் மீது ஏற்றப் பெறுகின்றன. இவ்வாறு மூன்று தினங்கள் ஏற் றிய பிறகு அவற்றின் அடிவயிற்றைக் கிழித்து சூற்பைகள் சோதிக்கப் பெறுகின்றன. கருப்பிணியின் சிறுநீராக இருப் பின் எலிகளின் சூற்பைகள் வீங்கி சிவந்து குருதிக் கசிவு களுடன் காணப்பெறும். இது ஜான்டேக் சோதனை என்று வழங்கப்பெறுகின்றது. இதனை முதன் முதலாக 1928-இல் செய்தவர்கள் ஆஸ்ச் ஹீம்: , ஜான் டெக் என்ற இரண்டு மருத்துவர்கள். இந்தச் சோதனை குழுமுயலின்க் உடம்பி லும் செய்வதுண்டு: இச்சோதனையை பிட்மான் சோதனை' என்றும் வழங்குவர். இச்சோதனைகள் கவனமாகச் செய்யப் பெற்ருல் ஒரு பெண் கருப்பமுற்றுள்ளாள் என்பதை ஏறக் குறைய 98 சத விகிதம் உறு தியாக அறுதியிட்டு விடலாம்:

அண்மைக் காலத்தில் மேல்நாடுகளில் சில மருத்துவ நிலையங்களில் மூன்றுவதாக ஒரு முறை மேற்கொள்ளப் பெற்று வருகின்றது. இதற்குத் தென் ஆஃபிரிக்காவிலுள்ள

பழச்சருக்கரை-Glucose 43. ஜான்டேக் சோதனை-Zoadek test 44. gįsiv#gliðth-Aschheim. 45; &##ltptưdỳ-Rabbit:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/194&oldid=1285172" இலிருந்து மீள்விக்கப்பட்டது