பக்கம்:இல்லற நெறி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இல்லற நெறி


வேண்டிய கழிவுப் பொருள்கள் குருதியிலேயே தங்கி விடுகின்றன. குருதியிலிருந்து வெளியே செல்லக்கூடாத ஆல்புமின்’ என்னும் முட்டைச் சத்து சிறுநீரில் வெளி யேறத்தொடங்குகின்றது. இச்சத்து வெளியேறினால் உடனே கருப்பிணி தக்க சிகிச்கைகளை மேற்கொள்ளவேண்டும்; அன்ருடம் வெளியேறும் சிறுநீர் அறுபது அவுன்சுகள் இருக் கின்றதா எனக் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும். சிறுநீர் குறைவாக வெளியேறினுலும், கால்களிலும் முகத்திலும் வீக்கம்தோன் றிலுைம் சிறு நீரகங்கள் கெட்டுவிட்டன என்று அறிந்து உடனே தகுந்த சிசிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலவித சிக்கல்கள் தொடர்ந்து ஏற்படக்கூடும்.

கச்சு வாந்தி : கருப்ப காலத்தில் ஏற்படக்கூடிய அபாயமான கோளாறுகளில் இதுவும் ஒன்று. இது நான் காவது திங்களிலிருந்துதொடங்கிக் கருப்பத்தின்முடிவுவரை நீடித்திருக்கும். முதலில் இதைப் பெண்கள் மசக்கை” என்று எண்ணி அசட்டை செய்தல்கூடும். இது தவறு: மசக்கை என்பது இரண்டாவது வாரத்தில் தொடங்கி நான் காவது திங்களில் தானகவே நின்றுவிடக்கூடியது. கருப் பிணி ஐந்து திங்கள் முடிந்தும் வாந்தி எடுத்துக் கொண்டி ருந்தால் உடனே மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்; நச்சு வாந்தியின் காரணம் இன்னும் தெளிவாகப் புலளுகவில்லை:

உண்டவுடன் வாந்தி எடுத்தல், வயிற்றுக் குமட்டல் நிற்காது அதிகரித்துக்கொண்டே இருத்தல், வாந்தியும் விடாது ஏற்படுதல், உணவு வெளிவந்த பிறகு கோழை குருதி இவை கலந்த நீராக வெளி வருதல்-இந்த நோயின் அறிகுறிகளாகும். தாமதமின்றி நீடித்துப் படுக்கையி லிருந்து சிகிச்சை பெறுவது நல்லது. இந்த நோயால் பீடிக் கப் பெற்ற நோயாளியின் உயிரைக்காக்கும் நிமித்தம் கில

ச1. ஆல்புயுமின்-Albumen;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/200&oldid=1285175" இலிருந்து மீள்விக்கப்பட்டது