உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இல்லற நெறி


நிமிடத்திற்கொரு முறை என்று அடுத்தடுத்து ஏற்படுகின் றது: தொடக்கத்தில் இடுப்பின் பின்பகுதியில் இரண்டு ஆசனங்களும் சேரும் இடத்தில் அதிக வலி ஏற்படும். இப் பொழுது இனிமா கொடுத்துக் குடலைச்சுத்தம் செய்யவேண் டும். வலி தொடங்கிச் சிறிது நேரம் சென்றதும் கருப்பிணி இந்த வலி முன் வயிறு, பின் இடுப்புமுதலிய எல்லாப் பாகத் திலும் சமமாகப் பரவியுள்ளதை உணர்வாள்.

பிரசவ வேதனை அதிகமானதும் சிலருக்கு வயிற்றுக் குமட்டலும் வாந்தியும் வருவதுண்டு. சிலருக்கு அடிக்கடிச் சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. ஒவ்வொரு வலியின்பொழுதும் கருப்பையின் வாய் மிருது வாகி நன்ருக விரிந்துகொள்ளும் தன்மையை அடைகின்றது. பிரசவ வேதனை தொடங்கிய சில மணி நேரத்தில் கருப்பை யின் வாயை அடைத்துக்கொண்டிருக்கும் சளிபோன்ற பொருள் கழன்று சிறிது குருதியுடன் வெளியே வருகின்றது. இதை மருத்துவர்கள் "ஷோ என்பர். வீட்டிலுள்ள மூத் தோர் இதைத் தீட்டு கண்டுவிட்டதாகச் கூறுவர். இவ்வாறு வெளிப்படும் குருதி கொஞ்சமாகவே இருக்கும். அங்ங்ன மின்றி பெண்ணுறுப்பினின்றும் குருதி குபு குடிவெனப் பாய்ந்து வந்தால் முன்னடைப்பு நஞ்சுபோன்ற கோளாறு கள் ஏற்பட்டிருப்பதாக உணரவேண்டும்.

அதிகமாகிக் கொண்டிருக்கும் வலியினல் கருப்பை இரண்டு பாகமாகி விடுகின்றது. கீழ்ப்பாகம் மெலிந்தும் மேற்பாகம் தடித்ததும் மாறிக் கொள்ளுகின்றது. தடித்த மேற்பகுதி குழந்தையை உந்திக் கீழ்நோக்கித்தள்ளுகின்றது. கருப்பையின்தசைகள் சுருங்கும்பொழுது கருப்பைக்குள் ஒரு பெரிய அழுத்தம் ஏற்படுகின்றது. இந்த அழுத்தம் குழந் தையை நாலாபக்கமும் அமுக்கி வெளியே தள்ளுகின்றது. கருப்பையின் அழுத்தத்தின் ஆற்றல் ஒரு பெரிய பயில் வானின் பிடிப்பின் உறுதியைவிட நான்கு மடங்கு மிக்கது

57. Gaym—Show.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/208&oldid=1285179" இலிருந்து மீள்விக்கப்பட்டது