உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 8ዕኘ

றது. இது பின்னிலைப் பிரசவம்' என வழங்கப்பெறும்: கருப்பை நஞ்சை வெளிப்படுத்திய பிறகு மிகவும் கடின மாகிச் சிறுத்துச் சுருங்கி விடுகின்றது: பிரசவம் ஆனவுடன் சுமார் இரண்டு பவுண்டு எடையுள்ள கருப்பை ஆருவது. வார இறுதியில் இரண்டு அவுன்சாகக் குறைந்துவிடுகின்றது பிரசவித்த பிறகு உள்ள கருப்பையின் நிலை படத்தில் காட் டப்பெற்றுள்ளது (படம்-38). இது நாடோறும் கிறிது சிறிதாகச் சுருங்கிச் சென்று முதல்வாரத்தின் இறுதியில் ஒரு பவுண்டு எடையுடையதாக மாறிவிடுன்றது. அப்பொழுது பியூயிஸ் என்ற இடுப்பெலும்பிற்குமேல் இரண்டு அங்குல உயரத்தில் அது கைக்குத் தட்டுப்படும். பிரசவம் ஆன பத்தாவது நாள் அடிவயிற்றில் மிகவும் இலேசாகச்சிறிதளவு கைக்குத் தென்படும் அதற்குப்பிறகு அது நன்ருகச் சுருங்கி அடிவயிற்றுக்குள் இறங்கிக்கொண்டு விடுவதால் வயிற்றின் மீது கைவைத்துப் பார்த்து அதனை உணரமுடிவதில்லை. ஒரு பெரிய குழந்தையைத் தன்னுன் அடக்கி வைத்துக் கொண் டிருந்த கருப்பை பிரசவம் முடிந்தவுடன் ஒருகை முட்டியின் பரிமாணத்திற்குக் கல்போன்று கடினமாகச் சிறுத்துவிடு வது வியப்பினும் வியப்பன்ருே? ஒரு குழந்தை வெளிப்படு தற்குக் கருப்பை சுமார் 135 தடவைகள் சுருங்கி விரிவதாக கில மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர்.

பலவகைப் பிரசவங்கள்: இவ்விடத்தில் இன்னும் சில செய்திகளையும் நீ அறிந்து கொள்ள வேண்டும். தொண் னுாற்ருறு சத விகிதப் பிரசவங்களில் தலை உதயமே நிகழ் கின்றது; கருப்பையில் சாதாரணமாகக் குழந்தையின் தலை கீழாகத்தானிருக்கும் (பார்க்க: படம்-25,84: கால்களும் கைகளும் வளைந்தோ மடிந்தோ இருக்கும். தலை கீழ்நிலையில் இருப்பதால் அதுவே பிறப்பின்பொழுது முதலில் வருவது இயல்பாகும். தலை வட்டமாகவும் உறுதியாகவும் இருப்ப

63: “Logiraflèull wordførlb"—Afterbirth. 63. 5&B 2-5uth-Head Presentation: 64. இந்நூால்-பக்கம் 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/213&oldid=598007" இலிருந்து மீள்விக்கப்பட்டது