பக்கம்:இல்லற நெறி.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 215.

வளரும் குழந்தையைத் தனது உட்புறத்தில் மிகுந்த பத்திர மாக வைத்துப் பாதுகாக்கும் பொறுப்பு இடுப்பெலும்புக் கட்டினுடையது. இந்தக் கட்டிற்குள் தசைகள், நரம்புகள், குருதிக் குழல்கள் முதலியன பரவிக்கொண்டு கருப்பைக்கு அதிர்ச்சி ஏற்படாதவாறு பஞ்சணைபோல் தாங்கி உதவு கின்றன. இடுப்பெலும்புக்கட்டு பின் இடுப்பெலும்பு." பக்க இடுப்பெலும்பு, முன் இடுப்பெலும்பு என்ற மூன்று எலும்புகளாலும், பின் பக்கத்தில் திரிகம், உள் வால் (குத) எலும்பு' என்ற முதுகெலும்பின் முடிவுப் பகுதிகளாலும் ஆக்கப்பெற்ற அகன்ற வாயையுடைய கட்டை போன்ற ஓர் உறுப்பாகும். குழந்தையின் தலை இந்த இடுப்பெலும்புக் கோட்டைக்குள்ளிருந்து வெளிப் படவே இயற்கையில் இடுப்பெலும்புக் கட்டு அகன்ற வாயினையுடையதாயிருக்கின்றது. அகன்ற வாயுடைய இடுப் பெலுப்புக் கட்டினையுடைய பெண்கள் எளிதாகக் கரு வுயுர்க்கின்றனர். குறுகிய வாயினையுடைய இடுப்பெலும்புக் கட்டினைக் கொண்ட பெண்கள் பிரசவத்தில் மிக்க தொநீ தரவுகளை அடைகின்றனர். இடுப்பெலும்புக்கட்டு இயற்கை யாக அன்றிச் செயற்கையாலும் குறுகிவிடக் கூடும். சிறு வயதில் ஊட்டமுள்ள உணவு இல்லாவிட்டால் ரிக்கெட்ஸ்' என்னும் நோய் ஏற்பட்டுப் பெண்ணின் இடுப்பெலும்புக் கட்டு மிகவும் சிறுத்துக் கொண்டு விடுவதால் சிரமப் பிரச வம் ஏற்படுகின்றது.

இடுப்பெலும்புக் கட்டினை அகன்ற வாயுடையது, குறு கிய வாயுடையது, நோயால் சிறுத்துப் போனது, சிறிது குறுகியது என்று நான்கு வகையாகப் பிரித்துக் கூறுவர் மருத்துவர்கள். முதல்வகைக் கட்டினையுடைய பெண்கள்

68; பின் இடுப்பெலும்பு-tlium. 69. பக்க இடுப்பெலும்பு-tschtu1. 70. முன் இடுப்பெலும்பு-Pubis) 7 s. 5\flá; th—Sacrum. 72. உள் வால் (குத) எலும்பு.oேccyx. ¥ 3. flâ®&L-gñ-Rickets.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/221&oldid=598025" இலிருந்து மீள்விக்கப்பட்டது