பக்கம்:இல்லற நெறி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இல்லற நெறி


களுக்கு இடம் கொடாதிருத்தல்வேண்டும். அவர்களின் உடல் நில்ை வேறு; இவர்களின் உடல்நில வேறு.

பால் சுரத்தல்: கருவுயிர்த்த தாயின் கொங்கைகளில் எப்பொழுது பால் சுரக்கின்றது என்பதுபற்றிச் சிறிது கூறு வேன். கருப்பகாலத்தின் தொடக்கத்திலேயே கொங்கைகள் பருக்கின்றன: மூன்ருவது மாதத்திலேயே கொங்கைகளில் சற்று மஞ்சல் நிறமுள்ள கொலஸ்ட்ரம' எனப்படும் ஒரு மெல்லிய பாய்மம் சுரக்கின்றது. இது கருவுயிர்த்தமூன்ருவது அல்லது நான்காவது நாள்வரை நீடிக்கும். இப்பொழுது கொங்கைகள் திடீரென்று மீண்டும் பருத்து உறுதியடையும். இந்தப் பாய்மமும்தாய்ப்பாலாகமாறும். கொலஸ்ட்ரத்தைக்

படம்-37 : கொங்கையின் ஒரு வெட்டுத் தோற்றத்தில் பால் சுரப்பிகளையும் அவற்றின் துTம்புகள் முலைக்கண்ணில் ஒருங்கு சேர்வதையும் காட்டுவது:

குழந்தை உட்கொண்டால் அது மலச்சிக்கலின்றி நன்ருக மலம் கழிக்கும். குழந்தை மார்புக் காம்புகளைச் சுவைத்தால் கருப்பை சட்டென்று சுருங்கும்.

அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி களினல் அடித்தலைச் சுரப்பிகளிலும் சூற்பைகளிலும் சுரக்கும்

79, Qātressivulgit–Colostrum

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/232&oldid=1285191" இலிருந்து மீள்விக்கப்பட்டது