பக்கம்:இல்லற நெறி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-க்

குடும்பக் கட்டுப்பாடு

ஆடும்பக் கட்டுப்பாடு' என்பது மணமக்கள் குழந்தைகள் தமக்கு வேண்டாம் என்று கருதுங்கால் எச்சரிக்கையான முறைகளைக் கையாண்டு கலவி புரிவதும், குழந்தைப்பேறு வேண்டும் என்று கருதுங்கால் அம்முறைகளைக் கைவிடுவது மான ஒரு திட்டம் ஆகும். ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் கருத்தரியாப் பருவமும் கருத்தரிக்கும் பருவமும் உள்ளன. இவை உடலியல் அமைப்பில் அமைந்துள்ளன: குழந்தைப்பேற்றினை விரும்பாதவர்களுக்குக் கருத்தரியாப் பருவமே கூடு பருவம் ஆகும். இப்பருவத்தை உறுதிப் படுத்தி அக்காலத்தில் மட்டிலும் கூடுவது இயற்கைக் கருத் தடை முறையாகும். இன்று பல செயற்கைக் கருத்தடை முறைகள் மேற்கொள்ளப்பெறுகின்றன. அவை ஆண் முறைகள்” எனவும், பெண் முறைகள் எனவும் பிரித்துப் பேசப்பெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் பொறிநுட்பக் கருத்தடை முறைகள், வேதியியல் கருத்தடை முறைகள்” என்ற இருவகை முறைகள் உள்ளன. இன்று அறுவை முறை மூலமும் கருத்தடை செய்யப்பெறுகின்றது. செயற்கை முறைகளைவிட உயிரியல் முறைகளில்தான் நன்மையுண்டு. எதிர்காலத்தில் ஆய்வு நிலையிலுள்ள இந்த உயிரியல் முறை கள்தாம் பெருஞ் செல்வாக்குப் பெறுதல் கூடும். இவை பற்றிய செய்திகளும் இவற்றுடன் தொடர்புள்ள செய்தி களும் இப்பகுதியிலுள்ள ஐந்து கடிதங்களில் (21-25) விளக் கம் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/249&oldid=598087" இலிருந்து மீள்விக்கப்பட்டது