உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்னப்பொருத்தம் 19

வதற்கு அவற்றை அன்புக் கயிற்ருல் இயற்கை பிணிக் கின்றது; இப்பிணிப்பே திருமணம் ஆகும். இப்பிணிப்பிற் கென்றே இயற்கை இருபாலாரையும் பாதி பாதியாகத் தோற்றுவிக்கின்றது. இங்ங்னம் அம்மை-அப்பன்:ேபாலப் பாதி பாதியாகத் தோன்றிய உயிர்களின் அறிவும் மனமும் ஏனைய உறுப்புக்களும் பண்பட்ட பின் இயற்கை திருமணத் தின் மூலமாக அவர்தம் இருமை கெடுத்து ஒருமையாக்கி முழுமை வழங்குகின்றது. ஒருமை என்பது ஆன்ம நேய ஒருமைப்பாடு. இதனைத் திருமணம் அநுபவத்தில் பெற வைக்கின்றது.

வீட்டில் நின் பெற்ருேர்கள் திருமணப்பேச்சு தொடங்கி யுள்ளனர் என்று எழுதியிருந்தாய். நீ திருமணம் செய்து கொள்வதற்கு முன் என் யோசனைகளைக் கூறுமாறும் கேட் டிருந்தாய். திருமணம் புரிந்துகொள்வதற்குமுன் மூத்தோர் களை அண்மி திருமணம்பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்வது நல்லதே. திருமணத்தில் பங்கு பெறும் உடற் கூறு, உளக்கூறு பற்றிய செய்திகளேத் தெளிவாக அறிந்து கொண்டால் வாழ்க்கையில் மனநிறைவு கொள்ளும் முறையில் பொருத்தப்பாடு’ பெறுவதற்குத் துணையாக இருக்கும்.

திருமணம் பற்றிய ஒரு சில நூல்களைக் கூடப் படிக்க வில்லையென்றும், படிக்க வேண்டிய நூல்களைக் குறிப்பிட் டெழுதுமாறும் கேட்டிருந்தாய், புத்தகச் சந்தையில் பல கேடு பயக்கும் நூல்கள் வெளிவந்துள்ளன; வந்துகொண்டு மிருக்கின்றன. சில நூல்கள் காமவிகாரத்தை எழுப்பி இளைஞர்களைத் தவருண நெறிகளில் கொண்டு செலுத்தக் கூடியனவாகவும் உள்ளன. அவை ஒருபுறம் இருக்க, இன் ளுெருபுறம் நெறிகோணி நடந்து நோய்க் குள்ளானவர்கட்கு இழந்த இளமையைத் திரும்பப் பெறுவதற்குரிய மருந்துக்கள் பற்றி எண்ணற்ற விளம்பரங்கள் தோன்றிய

—-wa

3: Quir(5żğüurr@-Adjustment:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/25&oldid=598089" இலிருந்து மீள்விக்கப்பட்டது