பக்கம்:இல்லற நெறி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 曼榜帮

ணங்களாகும். இத்தகைய கருத்துகளின் அடிப்படையி லேயே கூடுபருவம் என்பது ஒரு மாதவிடாய் வட்டத்தில் இருப்பதாக அறுதியிடப்பெறுகின்றது. எனவே கூடுபரு வத்தை அறுதியிட வேண்டுமாயின், ஒரு மாதவிடாய் வட் டத்தில் சூற்பையிலிருந்து முட்டை வெளிவரும் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்ருகின்றது.

முட்டைப் பக்குவப்படும் காலம்: ஒரு பெண் தன்னிடம் எப்பொழுது சூற்பையினின்றும் முட்டை வெளியாகின்றது என்பதைத் தானேயறிந்து சொல்லுதல் அரிது; இயலாது; சிலர் முட்டை பக்குவம் அடையுங்காலத்தில் தம்முடைய அடிவயிற்றில் வலி ஏற்படுகின்றது என்றும் அல்லது சிறிய அளவில் மது குவலி உண்டாகின்றது என்றும் கூறுகின்றனர்; இப்பொழுது யோனிக் குழலில்' குருதியொழுக்கு ஏற் படலாம்; அல்லது குருதி தென்படலாம். இச்சமயத்தில் கொங்கை'களில் இறுக்கமும் ஏற்படலாம்; இந்த அறிகுறி கள் ஒரு மாதவிடாய் வட்டத்தில்’ ஒரு குறிப்பிட்ட நாளில் ஏற்பாடுமாயின் அது முட்டை பக்குவப்பட்டதற்கு அல்லது பக்குவப்படுவதற்கு உள்ளவை என்று கருதலாம். ஆளுல், மிகச் சிறுபாலோரிடமே இச் செயல்கள் நடை பெறுகின்றன. பெரும்பாலோர் இத்தகைய அறிகுறிகளை அறிவதே இல்லை.

பெருபாலும் மாதவிடாய் வட்டங்கள் ஒர் ஒழுங்கான முறையில் நடைபெறுவதில்லே. பெண்ணுக்குப் பெண் இவ் வட்டத்தின் கால அளவு மாறுபடும். ஒரே பெண்ணிடம் கூட தூரம் ஏற்படும் நாள் ஒழுங்காக வருவதில்லை. ஒரு குழந்தை பிறந்த பின்னரும், நோய்க்குப் பின்னரும், தூரம் வழக்கம் போல் ஒர் ஒழுங்கில் ஏற்படாது. சாதாரணமாக

21. &foot-Ovary 82. முட்டை மக்குவமடைதல்-Ovulation 23. யோனிக் குழல்-Vagina 24. கொங்கை-Breast 25; LorgsåL-Irú all-L-th-Menstrual cycle

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/261&oldid=598116" இலிருந்து மீள்விக்கப்பட்டது