உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இல்லற நெறி


விடாய் வட்டம் முடியும் நாட்களும், முட்டை பக்குவப் படும் நாட்களும் படத்தில் காட்டப்பெற்றுள்ளன. இவற்ருல் இப்பெண்ணிடம் முட்டை பக்குவப்படும் நாளை அறுதியிடல் இயலாது என்பது தெரிகின்றது.

கூடு பருவத்தை அறுதியிடும் முறை: இனி, கூடுபரு வத்தை அறுதியிடும் முறையை விளக்குவேன். முதற்படத் தில் குறிப்பிடப்பெற்ற பெண் 30 நாட்கன் வட்டத்தை யுடையவள். அவளிடம் முதல் மாதவிடாயின் தொடக்க நாளிலிருந்து 14, 15, 16வது ஆகிய மூன்று நாட்களில் என் ருவது ஒரு நாள் பக்குவமடையலாம். வித்தணுக்களும் முட்டையணுவும் உயிரோடிருக்கும் காலத்திற்காக இரண்டு பக்கங்களிலும் 3 நாட்கள் கூட்டப் பெறுகின்றன. இப் பொழுது அவளது கருத்தரி நாட்கள் 11-வது நாளுக்கும் 19-வது நாளுக்கும் இடைப்பட்ட நாட்களாகும். இந்த நாட்களில் எப்பொழுதும் அவள் கருத்தரிக்கலாம். மாத விடாய் தொடங்கின நாளிலிருந்து 11 நாட்கள் முடியும் வரையிலும், மீண்டும் 20-வது நாள் தொடங்கி அடுத்த மாதவிடாய் தொடங்கும்வரையிலும் அவள் கருத்தரியாள். இந்த நாட்களே கூடு பருவம் ஆகும்.

ஒழுங்கின்றி மாதவிடாய் ஆகும் பெண்களிடம் முட்டை பக்குவப்படும் நாட்களே அறுதியிட முடியாது என்ருலும், அவர்களுடைய கூடுபருவத்தை ஒருவாறு உறுதிப்படுத்தலாம். ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டம் 7 நாட்களிலிருந்து 32 நாட்கள் வரை மாறுபடுவதாகக் கொள்வோம். இவளிடம் 18-வது நாளுக்கும்.19-வது நாளுக் கும் இடைப்பட்ட நாட்களில் என்ருவது ஒரு நாள் முட்டை பக்குவம் அடையும். இந்த நாட்களின் இரு பக்கத்திலும் 3 நாட்களைக் கூட்டவே, அவளுடைய கருத்தரி நாட்கள் 9-வதிலிருந்து 22-வது நாள்வரை நீடிக்கும். இவளுடைய கூடுபருவம் முதலாம் நாளிலிருந்து எட்டாம் நாள் முடிய உள்ள நாட்களும் 23-வது நாளிலிருந்து அடுத்தமாதவிடாய் தொடங்கும் நாள்வரை உள்ள நாட்களும் ஆகும். எடுத்துக் காட்டாக, அவள் ஆகஸ்டு முதல் நாள் மாதவிடாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/268&oldid=1285208" இலிருந்து மீள்விக்கப்பட்டது